W171. உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.(Whispers from Eternity - Tamil & English)
171. உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.
தவிர்க்கமுடியாத நிகழ்வுகளின் பிரளயகால மேகங்கள் வந்து இடிஇடித்தன; அற்பமான சுகங்களாலும் நையப்புடைக்கும் சோதனைகளாலுமான மழை அடையாய்ப் பெய்து என் தைரியத்தாலான மண்நிலத்தை நன்கு நனைத்து மூழ்கடித்தது; பலகோடி இடைஞ்சல்கள் என்னைக் குத்துவதற்குத் தயாராக அழிவெனும் கத்தியுடன் முளைத்தன.
எதிர்ப்பாராத விளைவுகளெனும் பீரங்கி குண்டுகள் அதிரடி செய்யும்போதும், துன்பங்களெனும் துப்பாக்கி ரவைகள் என்னைச் சுற்றிலும் வேகமாக வந்து விழும்போதும், நான் உன் என்றுமழியாக் கரங்களாலான துளைக்கமுடியாத கோட்டையினுள் காக்கப்பட்டுள்ளேன் என்பதை நீ எனக்கு உணருமாறு செய்.
கடும்போராட்டமெனும் இருண்ட மரத்தின்மீது உன் பாக்கியமெனும் ஒளி வந்து விழும்போது, அதன் மலர்கள் நன்கு மலர்ந்து நன்றியைப் பிரதிகூலமாகக் காட்டி, உன் அருட்கருணையின் ஜோதியை வரவேற்பது எளிது.
துர்பாக்கியமெனும் இருண்ட இரவுகளிலும், என் நன்றி மலர்கள் புனிதமான அமைதியெனும் உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை வீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
171 I want to pour the scent of gratefulness at Thy feet.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org