W74. ஆன்ம-அறியாமையை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்குச் சேனாதிபதியாகத் தலைமைவகி! (Whispers from Eternity - Tamil & English)
74. ஆன்ம-அறியாமையை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்குச் சேனாதிபதியாகத் தலைமைவகி!
உன் நாமத்திற்காக நான் ரத்தம் சிந்தியுள்ளேன், உன் நாமத்தின் பொருட்டு நான் எப்போதும் ரத்தம் சிந்த தயாராகவுள்ளேன். அங்கங்கள் சிதிலமாக்கப்பட்டு, பழுதடைந்த உடலுடன், தன்மானம் அவமதிக்கப்பட்டு, அவதூறெனும் முட்கீரிடத்தைத் தலையில் சுமந்தும் - நான் ஒரு பெரும் போர்வீரனைப் போல, எவ்வளவு திடமான சோதனைகள் வந்து என்னை வாட்டினாலும், தளர்ந்து பின்வாங்காமல் போரிடுவேன்.
என்னை ஏளனப்படுத்திக் கொடுமைப்படுத்த வரும் சிப்பாய்களை, சாந்தமெனும் வாளால் நான் தண்டிப்பேன். உன் கட்டுப்பாட்டுடன் கூடிய அன்பின் என் படைகள், உன் நாமத்தை போர்க்கொம்பினால் முழக்கிக் கொண்டே, இருண்ட உள்ளங்களின் ராஜ்ஜியத்தை வென்று ஆக்கிரமிக்க வீறுநடையுடன் அணிவகுக்கின்றன.
உதவ உயர்த்திய என் கரங்கள் அடிவாங்கலாம், அன்பிற்குப் பதிலாய் ஏளன தண்டனையின் காயங்களைப் பெறலாம், ஆனால் உன் நாமத்தின் புகழ்பரப்பத் துடிக்கும் உன் போர்வீரனின் ஏக்கத்தை நீ அறிவாய் என்பதை உணரும்போது நான் திருப்தியடைகின்றேன். நான் எனக்கு வரும் சோதனைகளை, வடுக்களாக அன்றி, வீரத்தினாலும், ஊக்கத்தினாலுமான ரோஜாமலர்களாய் அணிந்து, உன் பொன்மய ஜோதியின் எண்ணத்தின் துணைகொண்டு, ஆன்ம-அறியாமையின் இருளை வெல்ல அதனுடன் போரிடுவேன்.
என்னவனே! ஆன்ம-அறியாமையின் படைகளை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்கு சேனாதிபதியாக தலைமைவகி!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
74 Be Thou my General in my invasion of Ignorance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org