Holy Kural - 130
130. நெஞ்சொடு புலத்தல் - Chiding the heart
1. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. You see, his heart is his alone; Why not my heart be all my own? V# 1291 2. உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. O heart, you see how he slights me Yet you clasp him as if friendly. V# 1292 3. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். You follow him at will. Is it 'The fallen have no friends' my heart? V# 1293 4. இனிஅன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. You won't sulk first and then submit Who will then consult you, my heart? V# 1294 5. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain. V# 1295 6. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. My itching mind eats me anon As I muse on him all alone. V# 1296 7. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. forget shame but not his thought In mean foolish mind I'm caught. V# 1297 8. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. My heart living in love of him Hails his glory ignoring blame. V# 1298 9. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. Who support a man in grief If lover's heart denies relief? V# 1299 10. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. Why wonder if strangers disown When one's own heart is not his own? V# 1300
Send Your Comments to phdsiva@mccrf.org