W55. நான் மெய்யுணர்விற்கு வானவிற் பாலம் கட்ட விரும்புகிறேன் (Whispers from Eternity - Tamil & English)
55. நான் மெய்யுணர்விற்கு வானவிற் பாலம் கட்ட விரும்புகிறேன்
பலயுகங்கள் எனக்கும் உனக்கும் இடையில் பெரும் வளைகுடாவை உருவாக்கியுள்ளது. அது உன்னை நான் மறந்த என் மறதி வெள்ளநீரினால் மென்மேலும் விரிவடைந்துள்ளது.
நான் இந்தக் கரடுமுரடான பாறைகளுடைய உலகாயதக் கரையில் நின்றுகொண்டு, கண்ணுக்கெட்டா உன் சீரான சாந்திக் கரையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். என் உள்ளத்தின் கட்டிடவல்லுனர்கள் உன்மீதான என் இடைவிடா நினைவினைக் கொண்டு, எனக்காக ஒரு பாலத்தைக் கட்டுகிறார்கள். அதனை என் திண்மையான ஒழுக்கக்கட்டுப்பாடு எனும் தாங்கும் தூண்களால் பொருத்தி அமைக்கிறார்கள்.
உனைப் பற்றிய என் கனாக்கள் ஒன்று திரண்டு மெய்யுணர்விற்கு வானவிற் பாலத்தை உருவாக்குகிறது. அதன்மூலம், உன்னை விரைவில் வந்தடைவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
55 I want to build a Rainbow-Bridge of Self-Realization
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org