W169. நீ என்னுடையவனாக ஆகுவாயா என்பதை அறிய நான் விரும்புகிறேன்(Whispers from Eternity - Tamil & English)
169. நீ என்னுடையவனாக ஆகுவாயா என்பதை அறிய நான் விரும்புகிறேன்
நான் என் ஆசைகளையெல்லாம் நொறுக்கித் தள்ளனும் எனினும், நான் கோடிக்கணக்கான ஜென்மகளெடுத்து அவற்றுள் உழலனும் எனினும், பிறப்புத் துன்பங்களையும், சாவின் கொடுமையையும், எல்லா வலிகளையும் நான் அனுபவிக்க நேரினும் எனக்குக் கவலையில்லை - நான் உன்னைக் கண்டுகொள்ள முடியுமெனில். மேலும், நான் உன்னை அடைவதற்கு மேற்கொள்ளும் கடின முயற்சியில், நான் எடுத்த பிறவிகளின் சடலங்கள் மலைபோல் குவியினும் எனக்குக் கவலையில்லை.
என் சுகங்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாக உன் சுகத்தையே நான் ஏற்க விரும்புகின்றேன். என் எல்லா அநித்திய இன்பங்களையும் நான் துறப்பது உனக்காகவே! உன் ஆனந்தம் ஒன்றே என்னுடையது, அது ஒன்று மட்டுமே என்னுடையது.
தெளிவாகக் கூறு என்னிடம்: நீ நிச்சயமாக என்னுடையவனாக ஆகுவாய் என்பதை! பின், நான் பொறுமையுடன் ஒரு லட்ச வருடங்களை ஒரு தினமாகக் கருதிக் காத்துக் கொண்டிருப்பேன்.
கூறு என்னிடம் - நீ என்னுடையவனாக ஆகுவாயா?
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
169 I want to know that Thou wilt be Mine.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org