MCCRF - A global volunteer network

Holy Kural - 068

68. வினைசெயல்வகை - Modes of action




1. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. When counsel takes a resolve strong Weak delay of action is wrong. V# 671 2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. Delay such acts as need delay Delay not acts that need display. V# 672 3. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். It's best to act when feasible If not see what is possible. V# 673 4. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். Work or foe left unfinished Flare up like fire unextinguished. V# 674 5. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். Money and means, time, place and deed Decide these five and then proceed. V# 675 6. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். Weigh well the end, hindrance, profit And then pursue a fitting act. V# 676 7. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். Know first the secret from experts That is the way of fruitful acts. V# 677 8. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. Lure a tusker by a tusker Achieve a deed by deed better. V# 678 9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். Than doing good to friends it is More urgent to befriend the foes. V# 679 10. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. Small statesmen fearing people's fear Submit to foes superior. V# 680

 

Powered by Blogger.