Holy Kural - 046
46. சிற்றினஞ் சேராமை - Avoiding mean company
1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். The ignoble the noble fear The mean hold them as kinsmen dear. V# 451 2. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. With soil changes water's taste With mates changes the mental state. V# 452 3. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். Wisdom depends upon the mind The worth of man upon his friend. V# 453 4. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. Wisdom seems to come from mind But it truly flows from the kind. V# 454 5. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். Purity of the thought and deed Comes from good company indeed. V# 455 6. மனம்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. Pure-hearted get good progeny Pure friendship acts with victory. V# 456 7. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். Goodness of mind increases gain Good friendship fosters fame again. V# 457 8. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. Men of wisdom, though good in mind In friends of worth a new strength find. V# 458 9. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. Good mind decides the future bliss Good company gains strength to this. V# 459 10. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். No help good company exceeds; The bad to untold anguish leads. V# 460
Send Your Comments to phdsiva@mccrf.org