Holy Kural - 091
91. பெண்வழிச்சேறல் - Being led by women
1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. Who dote on wives lose mighty gain That lust, dynamic men disdain. V# 901 2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். Who dotes, unmanly, on his dame His wealth to him and all is shame. V# 902 3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். Who's servile to his wife always Shy he feels before the wise. V# 903 4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று. Fearing his wife salvationless The weaklings' action has no grace. V# 904 5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். Who fears his wife fears always Good to do to the good and wise. V# 905 6. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். Who fear douce arms of their wives Look petty even with god-like lives. V# 906 7. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. Esteemed more is women bashful Than man servile unto her will. V# 907 8. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். By fair-browed wives who are governed Help no friends nor goodness tend. V# 908 9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். No virtue riches nor joy is seen In those who submit to women V# 909 10. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote. V# 910
Send Your Comments to phdsiva@mccrf.org