W42. நான் "வீடு" திரும்ப வேண்டுகிறேன் (Whispers from Eternity - Tamil & English)
42. நான் "வீடு" திரும்ப வேண்டுகிறேன்
தடைகளே, உஷார்! என் பாதையை விட்டு அகலுங்கள்! நான் "வீடு" நோக்கிச் செல்கிறேன்.
காலத்தின் நீள் பாதையில், நான் தவறெனும் குழிகளில் பன்முறை விழுந்து, விழும்போதெல்லாம் உன் மறைவான கைகளால் தூக்கிவிடப்பட்டு, நான் என் நடையைத் தொடர்ந்துள்ளேன்.
உன் வீடு நோக்கி பயணிக்கும் என் வழியில் விரக்திதரும் இருள், முள்வேலியிடும் பழக்கங்கள், கல்பாறைநிகர் சோம்பல், மலைபோல் உதாசீனம், கடலளவு அவநம்பிக்கை, புலன் அபாயங்கள் போன்றவை குறுக்கிட்டு இடைமறிக்கலாம்; ஆனால் கோடிக்கணக்கான ராஜ்யங்கள், எண்ணிலடங்கா வருடங்களுக்கு மைந்துற அளவில்லா உலக இன்பங்கள் பெறினும், அவைகள் நான் உன்னை விட்டுவிடுவதற்கு என்னை தூண்டாது.
ஏ மஹா சமுத்திரமே, எனது மனிதத் தேவைகளெனும் நதிகள் உன்னிடம் கலந்து நிறைவுறுகின்றன. பல்வேறு இடும்பைப் பாலைவனங்கள் வழியே சுற்றி ஓடிய என் ஆசைநதிகள் உன்னில் சங்கமமாகி லயிக்க வேண்டுகிறேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
42 I Demand to return Home
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org