Holy Kural - 073
73. அவை அஞ்சாமை - Courage before councils
1. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் The pure fail not in power of words Knowing grand council's moods and modes. V# 721 2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் Among scholars he is scholar Who holds scholars with learned lore. V# 722 3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். Many brave foes and die in fields The fearless few face wise councils. V# 723 4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். Impress the learned with your lore From greater savants learn still more. V# 724 5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு Grammar and logic learn so that Foes you can boldly retort. V# 725 6. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. To cowards what can sword avail And books to those who councils fail? V# 726 7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். Like eunuch's sword in field, is vain His lore who fears men of brain. V# 727 8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். Though learned much his lore is dead Who says no good before the good. V# 728 9. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். Who fear to face good assembly Are learned idiots, certainly. V# 729 10. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். They are breathing dead who dare not Empress before the wise their art. V# 730
Post a Comment