W167. உன் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி.(Whispers from Eternity - Tamil & English)
167. உன் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி.
பேருணர்வே, உன் ஆன்மீகச் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன்னிடம் இருந்து பெறும் சக்தியினால் அன்றி எந்த ஓர் செயலும் செய்ய சாத்தியமில்லை.
உனக்கு ஆட்செய்யும் கடமையை விட வேறெந்த கடமையும் முக்கியமானதன்று என்று உணர எங்களுக்குக் கற்பி, ஏனெனில் நீயில்லாமல் எந்த ஓர் கடமையும் சாத்தியமில்லை; உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் நேசிக்க எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன் பேரன்புப் பேருயிரினால் அன்றி நாங்கள் வாழவோ, எதையும் விரும்பவோ, யாரையும் நேசிக்கவோ முடியாது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
167 Teach us to consider no work more important than Thy work.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org