Holy Kural - 063
63. இடுக்கண் அழியாமை - Hope in mishap
1. இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். Laugh away troubles; there is No other way to conquer woes. V# 621 2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். Deluging sorrows come to nought When wise men face them with firm thought. V# 622 3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். Grief they face and put to grief Who grieve not grief by mind's relief. V# 623 4. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. Who pulls like bulls patiently on Causes grief to grieve anon. V# 624 5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். Before the brave grief grieves and goes Who dare a host of pressing woes. V# 625 6. அற்றேமென்று அல்லற்படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர் The wise that never gloat in gain Do not fret in fateful ruin. V# 626 7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். The wise worry no more of woes Knowing body's butt of sorrows. V# 627 8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். Who seek not joy, deem grief norm By sorrows do not come to harm. V# 628 9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். In joy to joy who is not bound In grief he grieves not dual round! V# 629 10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. His glory is esteemed by foes Who sees weal in wanton woes! V# 630
Send Your Comments to phdsiva@mccrf.org