W64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி (Whispers from Eternity - Tamil & English)
64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி
64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி
கண்மறைக்கும் தவறுகளின் இரவினில், நாங்கள் சதக்க-வெளிச்சம் போன்ற போலி சுகத்தை நாடிச் சென்றோம். இருளுக்கு மேல் இருள் கவ்வியது. முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த எங்கள் கால்கள் சறுக்கி பாசம் மண்டிய மோகக்குழப்ப சதுப்புநிலக் கழியில் நாங்கள் வீழ்ந்தோம். இந்த மயக்கும் புகைமூட்டத்தினால் ஏற்படும் ஆசைக்கனல், பலபேரை அழிவிற்கு இழுத்துச் செல்கிறது. பல்லாயிரக் கணக்கானோர் திகட்டும் புலனின்ப சதக்கலில் மூழ்குகின்றனர்.
கைகொடுக்கும் தெய்வமே, உன் வீடுநோக்கிப் பயணிக்கும் உன் ரத்தபந்தங்களை தடுமாற்றி நாசமேற்படுத்தும் இந்தப் பொய்யான பந்தவிளக்கை ஊதி அணை. அதற்கு மாறாக, உன் புனித ஒளிவிளக்கை ஏற்று; அதன் துணையால், ஆவலுடன் விரையும் உன் குழந்தைப் பயணிகள் பாதுகாப்பாக உன் வீட்டை வந்தடைவார்கள்.
---
"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp): இரவு வேளைகளில் சதுப்புநில சகதிப் புதர்களிலிருந்து பாக்டீரிய கிருமிகள் மட்கும் செயல்களால் ஒரு வகை வெளிச்சம் தோன்றும். இந்த இரவுநேர வெளிச்சம் பகல்வேளைக் கானல்நீரைப் போன்றது.தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
64 Teach us not to follow the Will-o'-the-Wisp of False Happiness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org