W165. என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே(Whispers from Eternity - Tamil & English)
165. என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே
என் வானவில்-கனவு விறகுகளால் மூட்டப்படும் என் லட்சியத்தீ மேன்மேலும் வளர்கிறது. பழைய கனவுகள் நினைவிலிருந்து மறைய மறைய, விடாப்பிடியான புது எதிர்பார்ப்புகள் தணிக்க முடியாத, புதிதான சுடர்களாய் பெருகி, என் புத்துணர்வு சக்தியெனும் திடமான பல மரங்களைச் சுட்டெரித்து விழுங்குகின்றன.
என் தோட்டத்தை வாழ்க்கையின் பசுமை நிறைத்திருந்தது. இப்போது, உயிருணர்ச்சி பாதி இழந்த, ஒளிமங்கிய நடைப்பிணங்கள் இருண்ட சந்தேகங்களினூடே உலவுகின்றன. அவை உன்னை நோக்கி நான் எடுத்து வைக்கும் என் தயக்கமான காலடிகளை மிரள வைக்கின்றன.
தெய்வ நண்பா, என் உதவிக்கு வா, வழித்துணையாக வந்து என்னை இடைவிடாமல் முன்னோக்கி விரைவாக வழிநடத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
165 The fire of my ambition and all my rainbow-dreams are for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org