W179. என் நரம்புகளைக் குணப்படுத்து; என்னுள் புதிய நரம்பு வயர்களின் மண்டலத்தை பிரதிஷ்டை செய்.(Whispers from Eternity - Tamil & English)
வாழ்க்கையெனும் சிறு ஓடையினருகே உள்ள என் ஆன்மக்குடில் நீ வந்தபோது புன்னகைபூத்தது. ரகசிய எலெக்ட்ரீஷியனே, என் பல வண்ணப் புலன் பல்புகள் உன் ஒளியைப் பிரகாசிக்க மறுக்கின்றன. என் நரம்பு-வயர்கள் ஆரவாரமான வாழ்க்கையின் பெருங்காற்றினால் நைந்து சிதிலமடைந்துள்ளன. நரம்பு மண்டல கட்டுமானத்தையும் ஒளிர்ந்து பரவும் பிராண சக்தியையும் உருவாக்குபவனே, படுகாயப்பட்டு உயிரிழந்த என் நரம்பு வயர்களை மறுமுறை உயிர்ப்பித்து எழச்செய்; உன் கங்குகரை காணா ஆற்றலை அவற்றின்வழியே பாய்ச்சு. அதனால் என் எரியாத எல்லா புலன் பல்புகளும் சட்டென துடித்தெழுந்து உன் புகழொளியை வீசட்டும்.
நான் ஓர் பல்பு; நீ அதில் பிரகாசிக்கும் புனித ஒளி. உண்மையில், நீயே பல்பும், ஒளியுமாக இருக்கின்றாய். இந்த அற்புத உண்மையை நான் உணருமாறு செய்.
என் சிதிலமடைந்த நரம்புகளைக் குணப்படுத்து; உன் ஒளியின் தெய்வீக ஜோதியை என் நோயினால் பீடிக்கப்பட்ட சதைப்பிண்ட பல்பின் வழியே வெள்ளமாய் செலுத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
179 Heal my nerves and install in me a new set of telephonic nerves.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
Send Your Comments to phdsiva@mccrf.org