W177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.(Whispers from Eternity - Tamil & English)
177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.
அன்பின் ஊற்றே, உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் எங்கள் நெஞ்சங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை நாங்கள் உணருமாறு செய். எங்கள் ஆசைநதிகள் எல்லாவற்றிற்கும் ஆதிமூலமே, எங்களை அற்பமான புலனின்ப மண்ணில் பாய்ந்து, வறண்டு ஆவியாகிப்போகாமல் இருக்க எங்களுக்குக் கற்பி.
எங்கள் ஆசைநதிகள் பணிவு, சுயநலத் தியாகம், பிறர்நலம் பேணுதல் எனும் எல்லா தாழ்வான நிலங்களின் வழியேயும் பாய்ந்து, இறுதியில், உன் அருட்கொடை மழையினால் மேலும் பெருகி, அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்க நாங்கள் உரிமையுடன்-வேண்டுகின்றோம்.
எங்கள் அனுதாபம், அன்பு, பாசமெனும் கிளைநதிகள், வறண்ட சுயநலமெனும் பூமியில் வழியே பாய்ந்து அருகிப் போகாமலிருக்க எங்களுக்கு அருள்.
உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பின் தனித்தனியே பிரிந்து ஓடும் சிற்றோடைகள் எல்லாம், இறுதியில் அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்கட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
177 I want to merge in the vastness of Thy Presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
Compare with:
71 Flood me with Thine Omnipresent Love.
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org