W195. நான் எப்பொழுதும் உன்னுடையவனாக இருப்பேன். (Whispers from Eternity - Tamil & English)
195. நான் எப்பொழுதும் உன்னுடையவனாக இருப்பேன்.
நான் மிக தொலைவிற்கு, வெகுசேய்மையிலுள்ள விண்மீன்களை விட நெடுதூரம் சென்றாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!
பக்தர்கள் வருவார்கள், செல்வார்கள்; ஆயினும் நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!
நான் அலைபோல்வரும் ஜென்மந்தோறும் தாவி பல ஜீவிதங்களை எடுப்பினும், தனிமை வானிற்கடியில் அநாதரவாய்க் கிடந்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!
உலகம் உன் கேளிக்கையில் மயங்கி உன்னை விடுத்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன். நீ எனக்குக் கொடுத்த அனைத்தையும் திருப்பி எடுத்துக் கொண்டாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்.
மரணம், நோய், சோதனைகள் - இவை என்னை சல்லடையாய்த் துளைத்து நார்நாராகக் கிழித்தாலும், நினைவின் பிரகாசம் மங்கி அணையும் வேளையில், என் உயிர்நீக்கும் கண்களைப் பார், அவை அமைதியாக சொல்லும், "நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்."
என் குரல் நுடங்கி ஒடுங்கி எனைவிட்டு அகன்றிடினும், என் ஆன்மாவின் மோனக் குரலினால் பூரித்து நான் உன்னிடம் சன்னமாய் ஒலிப்பேன், "நான் எப்பொழுதும் உன்னுடையவனே!"
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
195 I will be Thine always.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org