MCCRF - A global volunteer network

Holy Kural - 042

42. கேள்வி - Listening




1. செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth. V# 411 2. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். Some food for the stomach is brought When the ear gets no food for thought. V# 412 3. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed. V# 413 4. கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. Though not learned, hear and heed That serves a staff and stay in need. V# 414 5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். Virtuous men's wisdom is found A strong staff on slippery ground. V# 415 6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். Lend ear to good words however few That much will highly exalt you. V# 416 7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். Who listen well and learn sharply Not ev'n by slip speak foolishly. V# 417 8. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. That ear though hearing is dulled Which is not by wisdom drilled. V# 418 9. நுணங்கிய கேள்வியர் ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது A modest mouth is hard for those Who care little to counsels wise. V# 419 10. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். Who taste by mouth and not by ear What if they fare ill or well here? V# 420

 

Powered by Blogger.