MCCRF - A global volunteer network

Holy Kural - 074

74. நாடு - The country




1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. It's country which has souls of worth Unfailing yields and ample wealth. V# 731 2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. The Land has large luring treasure Where pests are nil and yields are sure. V# 732 3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. It's land that bears pressing burdens And pays its tax which king demands. V# 733 4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு It is country which is free from Fierce famine, plague and foemen's harm. V# 734 5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. Sects and ruinous foes are nil No traitors in a land tranquil. V# 735 6. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை The land of lands no ruin knows Even in grief its wealth yet grows. V# 736 7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. Waters up and down, hills and streams With strong forts as limbs country beams. V# 737 8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. Rich yield, delight, defence and wealth Are jewels of lands with blooming health. V# 738 9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு A land is land which yields unsought Needing hard work the land is nought. V# 739 10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு Though a land has thus every thing It is worthless without a king. V# 740

 

Powered by Blogger.