W186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.
பரந்து விரியத்தக்கப் பொன்மய இறக்கைகளையும், மிருதுவான கோமள சிறகுகளையும் கொண்டு வர்ணப் பொலிவுடன் அழகிய ரூபத்தில் உன்னால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கலோகப் பறவை நான்.
முன்னேற்றத்திற்காகத் தணியாத ஆசைகொண்ட என் இறக்கைகளை வீசி, சாந்தி சொர்க்கத்தை நாடி, இறுக்கமான வாழ்க்கை வானத்தில் நான் இடையறாமல் சிறகடித்துப் பறந்துள்ளேன்.
கலக்கமெனும் இருள் பலமுறை என் பிரகாசமான மனத்தின் இலகுவான இறகுகளை மூடி, அவற்றின் ஒளியை மங்கச் செய்துள்ளன.
கடவுளே, மாசடைந்த உன் சொர்க்கலோகப் பறவையை உள்காட்சியெனும் தூய்மைப்படுத்தும் சூரிய-ஒளிக் கதிர்களாலும், இனிமையாக சலசலக்கும் சாந்தி நீரோடையிலும் நீ நீராட்டு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
186 I want to be Thy cleansed Bird of Paradise.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org