W37. சர்வசக்தியுடைய பேருணர்வே, என் எதிர்பார்ப்புகளெனும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக. (Whispers from Eternity - Tamil & English)
37. சர்வசக்தியுடைய பேருணர்வே, என் எதிர்பார்ப்புகளெனும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக.
சாந்திக்கோயிலினுள்ளே, சுகானந்தக் கடவுளே, நீ வா! பக்திஸ்தலத்திற்குள், பிரம்மானந்தக் கடவுளே, நீ வா! என் நற்குண ஆலயத்தினை உன் சாந்நித்தியத்தால் புனிதமாக்கு.
சர்வசக்தியுடைய அல்லா, என் எதிர்பார்ப்புகளெனும் தன்னந்தனியே காத்திருக்கும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக. அல்லா, என் மன மசூதி நிஸ்சலனமெனும் சுகந்தத்தை பரப்புகின்றது.
வா! உன் காலடிகளின் ஓசையைக் கேட்க நாங்கள் காத்திருக்கின்றோம். என் சுய-முன்னேற்றமெனும் விஹாரம் உன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.
வலுவான, தூய வெண்மையான பக்தியால் எழுப்பப்பட்ட என் கட்புலனாகாப் பிரார்த்தனைத் திருச்சபைக்குள், என் இதயத்தின் அன்பினால் புத்துணர்வூட்டப்பட்ட பணிவான அர்ப்பணங்களை நாள்தோறும் வந்து நீ ஏற்றுக்கொள்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
37 Hover over the minaret of my expectations, O Mighty Spirit.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org