W32. உரிமையுடன் வேண்டும் பிரார்த்தனை: என்னை கிறிஸ்துவனாகவோ, இந்துவாகவோ, அல்லது எந்தவொரு மதத்தவனாகவும் ஆக்கு - நான் உன்னை மெய்யாக உணர்வெனெனில். (Whispers from Eternity - Tamil & English)
32. உரிமையுடன் வேண்டும் பிரார்த்தனை: என்னை கிறிஸ்துவனாகவோ, இந்துவாகவோ, அல்லது எந்தவொரு மதத்தவனாகவும் ஆக்கு - நான் உன்னை மெய்யாக உணர்வெனெனில்.
நான் கிறிஸ்துவனாகவோ, யூதனாகவோ, இந்துவாகவோ, புத்தமதத்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, அல்லது ஸுஃபியாகவோ இருந்தாலும்: நான் எந்த மதத்தவன், எந்த இனத்தவன், எந்த கொள்கையுடையவன், எந்த நிறத்தவன் என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை, உன்னை அடையும் வழியை மட்டும் நான் பரிசாகப் பெறுவேனெனில்! மாறாக, மதச்சடங்கு, சம்பிரதாயங்களின் குழப்பமான வழிகளில் சிக்கிக் கொள்வேனென்றால், நான் இவைகளில் எந்தவொரு மதத்தையும் சாராமல் இருப்பேனாக. நான் உன்னிடம் கொண்டு செல்லும் மெய்யுணர்வெனும் ராஜவீதிப் பாதையில் பயணிப்பேனாக. எந்த மதமெனும் துணைப்பாதையின் வழியே நான் பயணித்தாலும் என் அக்கறையெல்லாம் இறுதியில், உன்னிடம் நேரே இட்டுச் செல்லும் ஒரே உயர்வழிச் சாலையான பொதுவான மெய்யுணர்வுப் பாதையை அடைவதே.
என்னுடைய சக்திகள் அரும்பும் பகற்பொழுதில் என்னை வழிநடத்த உன் ஞானச்சூரியனின் பிரகாசத்தை அனுப்பிவை; சோகத்தின் இராப்பொழுதில் நான் பயணிக்க நேர்ந்தால், உன் கருணைச் சந்திரனை எனக்கு வழிகாட்ட அனுப்பு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
32 Prayer-Demand: Make me anything: a Christian or a Hindu - anything to realize Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org