W68. எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று. (Whispers from Eternity - Tamil & English)
68. எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.
நாங்கள் அமைதியான கடலில் சுகமாய் நீந்திக் கொண்டிருந்தோம்; பின்பு புகழ், நட்பு, பிரபலமெனும் தூண்டில்-புழுக்கள் எங்களைக் கவர்ந்தன. எங்களில் சில அத்தூண்டில் புழுக்களைத் தொட்டுப் பதம் பார்த்தன; வேறுசில அவற்றைக் கண்டவுடன் ஓடிப் பறந்தன.
அய்யகோ, ஆனால் சில உலகக்கவர்ச்சி தூண்டில்-புழுக்களை, மயக்கும் புலனின்ப வலை-மாகுக்களை (sinker) விழுங்கிவிட்டன; மாட்டிக்கொண்ட அவைகள் மிகுதியால் தெவிட்டும் கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டன.
வலியின் துக்கம் தாங்கமுடியாமல் அவை துடித்து, உதாசீனத்தின் இறுக்கத்தால் நெருக்கப்பட்டு இறுதியில் மூச்சுமுட்டி மடிந்தன.
ஏ காலமெனும் தெய்வ ஆசிரியனே, எங்களை திளைத்து மயக்கும் புலனனுபவ தூண்டில்களை நாங்கள் தொடமாலிருக்க எங்களைப் பழக்கு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
68 Save us from the bait of Modern Comforts
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org