W224. நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
224. நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
பிரியமான இறைத்தந்தையே, என்னை இருளிலிருந்து விடுவிக்க நிலவொளி வருகின்றது. எனக்கு கதிரொளி நல்க பகலவன் வருகின்றது. எனக்கு உணவை அளிக்க தட்பவெப்ப காலங்கள் (ருதுக்கள்) வருகின்றன. ஆனால் நீ தான் இவைகளின் இயக்கக் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
224 Thou art the cause of everything - I bow to Thee (#212 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org