MCCRF - A global volunteer network

Holy Kural - 035

35. துறவு - Renunciation




1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் From what from what a man is free From that, from that his torments flee. V# 341 2. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல Give up all to gain the True And endless joys shall hence seek you. V# 342 3. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு Curb the senses five and renounce The craving desires all at once. V# 343 4. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. To have nothing is law of vows Having the least deludes and snares. V# 344 5. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை Why add to bonds while this body Is too much for saints to be birth-free. V# 345 6. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain. V# 346 7. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு Grief clings on and on to those Who cling to bonds without release. V# 347 8. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் Who renounce all are free from care Others suffer delusive snare. V# 348 9. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் Bondage cut off, rebirth is off The world then seems instable stuff. V# 349 10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon. V# 350

 

Powered by Blogger.