W10. எல்லாவிடங்களிலும் ஆன்மீகக் கோயில் கதவுகளைத் திறக்க வேண்டி உரிமையுடன்-முறையிடுதல். (Whispers from Eternity - Tamil & English)
10. எல்லாவிடங்களிலும் ஆன்மீகக் கோயில் கதவுகளைத் திறக்க வேண்டி உரிமையுடன்-முறையிடுதல்.
இறைத்தந்தையே, நான் முன்பு [ஆன்மீகத்திற்கு] குருடாயிருந்த போது, உன்னையடையும் வழிகாட்டும் ஒரு வாசற்கதவையும் நான் காணவில்லை. ஆனால், என் [ஆன்மீகக்] கண்களை இப்போது நீ திறந்து விட்டபின், பூக்கும் நெஞ்சங்களிலும், நட்பின் குரலோசையிலும், நேசமான அனுபவங்களின் இனிய நினைவுகளிலுமென வாசற்கதவுகளை நான் எல்லாப்பக்கங்களிலும் காண்கின்றேன். என் ஒவ்வொரு பிரார்த்தனையின் எழுச்சியும் உன் சாந்நித்தியத்தின் மகத்தான கோயிலுக்கு எவரும் நுழையாத ஒரு புதிய கதவைத் திறக்கின்றது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
10 Demand for the opening of the Spiritual Temple Doors everywhere.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org