W182. நீர்க்குமிழிகளான என் ஊனுடலையும், ரத்தத்தையும் எல்லையற்ற உன் கருணை வெள்ளத்தினால் ஞானஸ்நானம் செய்.(Whispers from Eternity - Tamil & English)
182. நீர்க்குமிழிகளான என் ஊனுடலையும், ரத்தத்தையும் எல்லையற்ற உன் கருணை வெள்ளத்தினால் ஞானஸ்நானம் செய்.
மேகத்தினின்று-தோன்றும் மழைகள், மலையிலிருந்து பெருகும் சுனையூற்றுக்கள், பெற்றோரின் ரத்தம், தாயின் நெஞ்சில் சுரக்கும் பால் - இவை எனக்குச் ஊனுடம்பின் உணர்வினை அறிமுகப்படுத்தின.
தாயின் பாசமிகுந்த அரவணைப்புடன், காயப்படத்தக்க சதைக்கூண்டில் சிறைப்படுத்தப்பட்டு அடைந்துகிடந்த என் ஆன்மா சுதந்திரத்திற்காகக் கதறி அழுதது. இனிய புலன் தோட்டங்களின் இரும்பு-வேலிகளுக்குள்ளே மேலும் அடைந்துகிடக்க எனக்கு விருப்பமில்லை.
பின்பு, அமைதி மேகம் இடித்து உன் கருணை மழையை வெகுவாகப் பொழிந்து, உன் அருள்பொங்கும் வெள்ளத்தை உருவாக்கியது. உன் பேருணர்வின் வேகம் என் ஆன்மாவின் எல்லைகளை உடைத்தெறித்தது. நான் தடைகளை உடைக்கும் உன் நிரந்தரத்தின் பொங்கும் வெள்ளநீரினால் ஞானஸ்நானம் செய்யப்பட்டேன்.
உன் பிரபஞ்சப் பேருணர்வின் வெள்ளத்தின் ஆற்றல், என்னைச் சுற்றிமூடிய என் புலன்களாலான வேலிகளை உடைத்தது; சிறிய நீர்க்குமிழிகளான என் ஊனுடலும், ரத்தமும் எல்லையற்ற சர்வவியாபகத்தினில் கரைந்து ஞானஸ்நானம் செய்யப் பெற்றன.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
182 Baptize the bubbles of my blood and flesh in the flood of Thy Grace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org