MCCRF - A global volunteer network

Atma Vidya Vilasa - Sanskrit-English-Tamil

 आत्मविद्याविलासः

श्रीसदाशिवेन्द्रसरस्वतीविरचितः

Atma Vidya Vilasa
By Swami Sadasiva Brahmendra

Thy Divine Gypsy
by Sri Paramhansa Yogananda
(Courtesy: Ananda.org
Note: The Divine Gypsy is a brief description of the Self-Realized and you may find correlations with a few couplets below, especially #46, #37, #38, #40, and more. 


Original: Encoded by Sunder Hattangadi

Courtesy: https://sanskritdocuments.org/doc_z_misc_major_works/AtmavidyAvilAsa.html

Tamil font PDF: https://sanskritdocuments.org/doc_z_misc_major_works/AtmavidyAvilAsa-ta.pdf

 

Translation by S. N. Sastri (appears first in each stanza)

Courtesy: https://www.shastras.com/vedanta-books-other/atma-vidya-vilasa/

 

Translation by Sri Ramanan (appears at the end of each stanza)

Most of the text is available at: http://athma-spiritualbliss.blogspot.com/2012/08/athma-vidya-vilasa-of-avadhootha.html


ஓம்

ஓம் விக்னேஸ்வராய நம:

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய நம:

ஓம் ஸ்ரீ ஸதாசிவேந்திர பிரம்மேந்திராள் பாதம் போற்றி

ஆத்மவித்யா விலாஸம்

अथ आत्मविद्याविलासः ।

चिन्मुद्रितकरकमलं चिन्तितभक्तेष्टदं विमलम् ।

गुरुवरमाद्यं कञ्चन निरवधिकानन्दनिर्भरं वन्दे ॥

0. கர கமலத்தினால் சின்முத்திரை காட்டுபவரே, நினைக்கும் பக்தர்கள் வேண்டுபவைகளைத் தருபவரே, மாசற்றவரே, பொன்போல் மிளிரும் மேன்மையான ஆதிகுருவே,   எல்லையற்ற ஆனந்தவெள்ளமே, உங்களை வணங்குகின்றேன். 

 I bow down to that first and best of gurus, who is immaculate, whose lotus hand sports the cinmudra, who bestows on his devotees all their desires and who overflows with endless bliss. 0.

---

वटतरुनिकटनिवासं पटुतरविज्ञानमुद्रितकराब्जम् ।

कञ्चन देशिकमाद्यं कैवल्यानन्दकन्दलं वन्दे ॥ १॥

1. I bow down to the indescribable primordial Guru (Dakshinamurti) who resides by the side of a fig tree, whose lotus hand displays brilliantly the jnana-mudra's (in which the tips of the thumb and the index finger of the right hand are joined), who is the sprout of the bliss that is liberation.

 

1. ஆலமரத்தடி நீழலில் கொலுவுற்றிருப்பவரே, உன்னதமான மெய்ஞ்ஞான முத்திரை காட்டும் தாமரைக் கையரே, சொக்கத் தங்கமாய் கிளர்ந்தொளிரும் ஆதி குருதேசிகரே, இரண்டற்ற கைவல்ய ஆனந்தத்தின் பெருங்குன்றமே, உங்களை வணங்குகின்றேன்.  

 

One who has his house near banyan tree, who is capable of driving away ignorance of his students,whose lotus like hands are in jnana mudra and filled with bliss of liberation,to such only one Guru(teacher) my prostrations.1

निरवधिसंसृतिनीरधिनिपतितजनतारणस्फुरन्नौकाम् ।

परमतभेदनघुटिकां परमशिवेन्द्रार्यपादुकां नौमि ॥ २॥

2. I salute the holy sandals of the noble Paramasivendra which are the effulgent boat that rescues the people who have fallen into this limitless ocean of transmigratory existence, and which are adept at refuting the wrong views of others.
(Note. Paramasivendra was the Guru of Sadasiva Brahmendra.)


2. கரைகாண முடியாத ஸம்ஸார சாகரத்தில் வீழ்ந்து அல்லல்படும் ஜனங்களைக் கரையேற்றும் பிரகாசமான படகாயும், நற்கதிக்கு மாறான வீண்கருத்துக்களை உதைத்தழிப்பவைகளுமான மேதகு பரமசிவேந்திரரின் பாதுகைகளை நமஸ்கரிக்கின்றேன்.    


I bow down before the sandals of Paramasivendra (Sarasvati ), which serve as a boat, ever active in rescuing those who have fallen into the limitless ocean of samsara and which knocks down all wrong views of others. 2.

देशिकपरमशिवेन्द्रादेशवशोद्बुद्धदिव्यमहिमाऽहम् ।

स्वात्मनि विश्रान्तिकृते सरसं प्रस्तौमि किञ्चिदिदम् ॥ ३॥

3. I in whom the divine glory has been awakened by the instruction of my Guru Paramasivendra lovingly present these few passages for the purpose of abiding in my own self.


3. பரமசிவேந்திர குருதேசிகரின் ஆக்ஞையால் விழிப்புணர்வுற்று தெய்வீகமகிமை பெற்ற நான், சுயம்பிரகாச ஆன்மாவான என்னுள் விஸ்ராந்தி (ஓய்வு) பெற, ஒருசில அழகிய மொழிகளை இங்கே  பொழிகிறேன்.  


I now begin to say a few sweet words (of praise) in order that I may rest in my own Self, whose divine greatness has been awakened perforce by the teaching of my preceptor, Paramasivendra. 3.

निरुपमनित्यनिरीहो निष्कलनिर्मायनिर्गुणाकारः ।

विगलितसर्वविकल्पः शुद्धो बुद्धश्चकास्ति परमात्मा ॥ ४॥

4. The supreme Self shines as incomparable, eternal, actionless, impartite, beyond the control of Maya, free from the three gunas (sattva, rajas and tamas), formless, beyond all wrong conceptions, pure, and consciousness itself.


4. தனக்குவமை இல்லாததும், என்றும் நித்தியமானதும், காரியங்களற்றதும், பிளவுபடாததும், மாயைக் கலப்பற்றதும், (முக்)குணங்களற்றதும், வடிவமற்றதும், கற்பனைகள் முற்றிலும் அறவே நீங்கியதும், பரிசுத்தமானதும், அறிவாகவுமாக மேலான பரமாத்மா பிரகாசிக்கின்றது.

The Supreme Self shines, pure, enlightented and devoid of all actions and forms; It is unique(incomparable), eternal,consciousness itself and free from all wrong conceptions;It is an indivisible whole, untouched by maya and free from the gunas (the threefold qualities, sattva,rajas and tamas). 4.

स्वाविद्यैकनिबद्धः कुर्वन्कर्माणि मुह्यमानः सन् ।

दैवाद्विधूतबन्धः स्वात्मज्ञानान्मुनिर्जयति ॥ ५॥

5. Bound by his own ignorance alone, performing various actions, the individual remains deluded. By good fortune he is freed from bondage by the knowledge of the self as a result of contemplation and emerges victorious.


5. சுய (ரூப) அறியாமையினால் (அறிவுக்கண்) கட்டப்பட்டு, மோகக் குழப்பத்தினால் பலவித காரியங்களைச் செய்யும் ஒருவர், தெய்வத்தின் அருளால் பந்தங்களிலிருந்து விடுபட்டு, தானே விளங்கும் ஆன்மஞானத்தினால் முனிவராக [ஒளிவீசுகின்றார்] ஜெயம் அடைகிறார்.   


He who was erstwhile bound merely by his own ignorance,was engaging in (worldly) activities and felt bewildered (as a consequence of that), now shines as a sage, having,by God's grace, shaken off  his shackles, with the knowledge of the Atman (his own Self). 5.

मायावशेन सुप्तो मध्ये पश्यन्सहस्रशः स्वप्नान् ।

देशिकवचःप्रबुद्धो दीव्यत्यानन्दवारिधौ कोऽपि ॥ ६॥

6. Sleeping because of Maya, the individual sees thousands of dreams. An exceptional individual is awakened from this sleep by the instruction of his Guru and shines in the ocean of bliss.
(Note. In the waking state also every one is under the influence of Maya. He sees the world which is not real and so the waking state is also like dream. It is only when he attains self-knowledge that he is awakened from the sleep of Maya and realizes his identity with Brahman which is supreme bliss. Only some exceptional individuals who have acquired the necessary qualifications such as total detachment, etc., can attain to self-knowledge.)


6. மாயையின் வசத்தில் பிடிபட்டு [உலக மயக்கத்தில்] உறங்கி பல்லாயிரக்கணக்கான கனவுகளைக் காண்பவர்களுள் எவரோ அரிதாக ஒருவர், குருதேசிகனின் உபதேசமொழிகளினால் விழிப்புணர்வுற்று ஆனந்தக்கடலில் [ஆனந்தக்கடலாய்] பிரகாசிக்கின்றார்.   


He who was sleeping(ignorance) under the influence of maya and hence was seeing thousands of dreams, is now awakened by the words of his guru and delights in the ocean of bliss. 6

प्राकृतभावमपास्य स्वीकृतनिजरूपसच्चिदानन्दः ।

गुरुवरकरुणापाङ्गाद्गौरवमासाद्य माद्यति प्राज्ञः ॥ ७॥

7. Giving up the state of ignorance and attaining one's own nature which is existence-consciousness-bliss by the compassionate glance of the great Guru, and thus attaining a high state, the enlightened person enjoys bliss.


7. மேன்மையான குருவின் கடைக்கண் பார்வைக்கருணையினால், இயற்கையீன்ற சுபாவத்தினை விலக்கி, தனது நிஜரூபமான ஸத் (இருப்புண்மை) - சித்  (பேருணர்வு) - ஆனந்தத்தை [மீண்டும்] தனதாக்கிக் கொண்டு,  அசாத்தியமான உயர்ந்த நிலையடைந்து, ஞானி போதக்களிப்பில் திளைக்கின்றார்.

 

The wise man, having cast off his natural propensities born of prakriti, having realized his real nature as Sat, Chith and Ananda, rejoices having attained to high state of bliss by a mere compassionate glance of the great teacher. 7.

श्रीगुरुकृपया सच्चित्सुखनिजरूपे निमग्नधीर्मौनी ।

विहरति कश्चन विबुधः शान्ताहन्तो नितान्तमुदितान्तः ॥ ८॥

8. The contemplative person whose mind is immersed in his own nature which is existence-consciousness-bliss by the grace of his Guru, is enlightened and revels, free from the notion of “I-ness's, his mind brimming with happiness.


8. ஸ்ரீகுருவின் கிருபையினால், மெய்யறிவுற்ற ஒருவர், தனது நிஜரூபமான ஸத் (இருப்புண்மை) - சித்  (பேருணர்வு) - சுகத்தினில் தன்  மனத்தை அமிழ்த்தி, அகங்காரத்தை முற்றிலும் சமனப்படுத்திவிட்டு, மௌனமாய் (மனச் சலனமற்று) அளவற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றார்.     

 

By the grace of his guru, the enlightened one rejoices silently, having destroyed his ego and with his mind sub-merged in his own nature as Existence, Knowledge and Bliss. 8.

गुरुवरकरुणालहरीव्यतिकरभरशीतलस्वान्तः ।

रमते यतिवर एको निरुपमसुखसीमनि स्वैरम् ॥ ९॥

9. The great ascetic whose mind is cooled by the waves of the Guru's compassion revels alone and at will in incomparable bliss.


9. குருசிரேஷ்டரின் கருணை வெள்ளத்தினால், தனது அந்தக்கரணங்கள் [தாபங்களிலிருந்து] வெகுவாகக் குளிர்ச்சிபெற்ற யதிசிரேஷ்டர் ஒருவர், ஒப்புமையற்ற சுகத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு தன்னிஷ்டப்படி ரமிக்கின்றார்.   

The best of sanyasies, delights at will & rejoices himself in incomparable bliss, with his heart cooled to a great extent, by the surging waves of compassionate Grace of great Guru. 9.

श्रीदेशिकवरकरुणारविकरसमपोहितान्तरध्वान्तः ।

विहरन्मस्करिवर्यो निरवधिकानन्दनीरधावास्ते ॥ १०॥

10. The noble ascetic whose inner darkness (ignorance) has been removed by the rays of the sun in the form of the compassion of the great Guru remains in the ocean of unlimited bliss.


10. ஸ்ரீ குருதேசிகரின் கருணையாகிய சூரியவொளிப் பிரகாசத்தினால், அகத்தே கிடந்த இருள் அறவே நீங்கப்பெற்ற சாதுக்களில் சிறந்தவொருவர், எல்லையற்ற ஆனந்தக்கடலில் நீந்தி விளையாடுகின்றார்.  

The best of sannyasies, from whose heart, darkness has been dispelled by the sun-like radiance of his Guru's Grace,plays in the boundless ocean of bliss. 10.

जनिविपरीतक्रमतो बुद्ध्या प्रविलाप्य पञ्चभूतानि ।

परिशिष्टमात्मतत्त्वं पश्यन्नास्ते मुनिः शान्तः ॥ ११॥

11. The calm contemplative who has merged the five elements mentally in the order opposite to that of creation realizes the Self which is what is left.
Note. The Taittiriya upanishad says that the five subtle elements were born in the following order: Ether was first born from the Self (Brahman). From ether air was born, from air fire, from fire water and from water earth. The present verse says that the effect should be merged in the cause, mentally. The element earth should be merged in its cause, water, i.e., earth does not have any existence apart from its cause, water. Then water should be merged in its cause, fire; fire should be merged in its cause, air, and air in its cause ether. Ultimately, ether should be merged in its cause, the Self or Brahman. Thus one realizes that Brahman is the only reality and it is one's own real nature.

 

11. பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசைக்கிரமத்திற்கு எதிர்மாறான வரிசையில், அவைகளை அவற்றின் மூலத்தினுள் புத்தியால் ஒடுக்கி, பின் எஞ்சியிருக்கும் ஆன்ம தத்துவத்தைக் கண்டு அனுபவித்துக்கொண்டு முனிவர் சாந்தமாக அமைந்திருக்கின்றார். 

The calm, contemplative Sage rests, knowing the Atman that remains after merging the five great elements in the reverse order of evolution. 11.

जगदखिलमिदमसारं मायिकमेवेति मनसि मन्वानः ।

पर्यटति पाटिताशः प्रगलितमदमानमत्सरः कोऽपि ॥ १२॥

12. Having mentally decided that this whole world is insubstantial, being only the product of Maya, he (the enlightened person) moves about without any expectation, free from pride, conceit and envy.


12. எவரோ அரிதாக ஒருவர், இந்த ஜகத் அகிலமும் மாயையின் வேலைப்பாடு என்பதனால் ஸாரமற்றதென மனதில் நன்கு அறிந்துகொண்டு, ஆசைகளை அறவே பாழாக்கி, செருக்கு, பொறாமை ஆகியவைகளையும் ஒழித்துவிட்டு சுற்றிவருகிறார். 

 

He wanders about with his desires crushed and with his pride, self-esteem and envy discarded, realising in his mind that this universe in its entirety is unsubstantial and of the nature of Maya alone. 12.

नात्मनि किञ्चिन्माया तत्कार्यं वाऽस्ति वस्तुतो विमले ।

इति निश्चयवानन्तः हृष्यत्यानन्दनिर्भरो योगी ॥ १३॥

13. In the pure Self there is no Maya or its effects at all. The yogi who has come to this definite conclusion is full of supreme bliss within.

 

13. மாசற்ற மெய்ப்பொருளான ஆன்மாவிற்கு, மாயையினாலோ அதன் காரியங்களினாலோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டு, யோகியானவர் தன்னகத்தே பெரும்பேரானந்தத்தில் மகிழ்கின்றார்.   

The yogi  , free of (all) burdens, rejoices in the bliss within,knowing for certain that, in reality, there is no trace of Maya or any of it's effects in the pure Self. 13.

त्वमहमभिमानहीनो मोदितनानाजनाचारः ।

विहरति बालवदेको विमलसुखाम्भोनिधौ मग्नः ॥ १४॥

14. Devoid of conceits (or distinctions) in the form I's and you's, happily accepting the varied behaviour of people, he sports alone, like a child, immersed in the ocean of pure bliss.


14. அரிதாக ஒருவர், நீ, நான் என்ற அபிமானமற்று, மாசற்ற சுகக்கடலில் மூழ்கி, ஜனங்கள் மேற்கொள்ளும் பலவித செயல்களை ஒரு பாலகனைப் போல ரசித்துக் கொண்டு சுற்றி உலவுகின்றார்.  


He sports like a child without any idea of `I' or `you', immersed in the ocean of pure happiness, (innocently) delighted at the various actions of (worldly) men. 14.

अवधूतकर्मजालो जडबधिरान्धोपमः कोऽपि ।

आत्मारामो यतिराडटवीकोणेष्वटन्नास्ते ॥ १५॥

15. The great ascetic, who has been cleansed of all accumulated karma, roams about in the interiors of forests ever reveling in the Self, appearing outwardly like an idiot, or a deaf or blind man.


15. எவரோ அரிதாக ஒருவர், மயக்கும் கர்மவினையை அறவே தூற்றிவிட்டு, ஆத்மாராமராகிய (தன் ஆத்மாவொன்றிலேயே ரமிப்பவராகிய) யதிசாம்ராட், பிறர்பார்வையில் முட்டாளையோ, செவிடனையோ, குருடனையோ போல (ஸம்ஸாரக்) காட்டினுள் மூலைமுடுக்குகளில் சுற்றித் திரிகின்றார்.    


Having discarded the (illusory) bondage of karma and delighting in the Atman,the prince of sannyasies wanders about in the outskirts of the jungle as if he were an idiot, like a blind or deaf person. 15.

शान्त्या दृढोपगूढः शान्तसमस्तान्यवेदनोदारः ।

रमते रसज्ञ एको रम्ये स्वानन्दपर्यङ्के ॥ १६॥

16. The knower of Brahman enjoys on the beautiful cot of his own bliss, alone, totally concealed (unknown to the world) because of his quiet nature, free from desire for all other knowledge.


16. அரிதான (பிரம்மானந்த) ரஸத்தை* அறிந்தவொருவர், தனது மனவமைதியினால் பிற மேலான விஷயங்களை அறியும் ஆவலை முற்றிலும் சமனப்படுத்திவிட்டு, பிறர்கண்படாமல் தன்னுள்ளத்தேயுள்ள ஆனந்தக்கட்டிலிலேயே சயனித்துக்கொண்டு ரமிக்கின்றார்.

* - பிரம்மத்தினையே "ரஸம்" என்னும் வார்த்தையால் வேதம் விளிக்கின்றது. 


Firmly established in peace, the happy one rests on the beautiful bed of his own ananda,contented & not interested to know anything else, serene and unruffled by all other sensations. 16.

उन्मूलितविषयारिः स्वीकृतवैराग्यसर्वस्वः ।

स्वात्मानन्दमहिम्नि स्वाराज्येऽस्मिन् विराजते यतिराट् ॥ १७॥

17. The great ascetic, having uprooted the enemy in the form of (desire for) sense-objects, and acquired the great wealth that is detachment, reigns supreme in his own kingdom that is in the form of the glorious bliss that is his own nature.


17. எல்லா செல்வங்களையும் நல்கும் வைராக்கியத்தினை தனதாக்கிக் கொண்டு, இந்திரியவிஷயப் பகைவர்களை வேரறுத்துவிட்டு, சுய சாம்ராஜ்ஜியத்தில் தனது ஆத்மானந்தப்  பேரரசை யதிசாம்ராட் ஆள்கின்றார். 

The king of sannyasies supremely shines in his own kingdom, in the majesty of his own blissful Self, having up rooted his enemies - the sense pleasures and with complete non-attachment & dispassion as his own nature. 17

सवितर्यपि शीतरुचौ चन्द्रे तीक्ष्णेऽप्यधो वहत्यग्नौ ।

मायिकमिदमिति जानन्जीवन्मुक्तो न विस्मयी भवति ॥ १८॥

18. Even if the sun's rays become cold, or the moon becomes hot, or a flame goes downward, the Jivanmukta is not astonished, knowing that all this is only Maya.


18. ஒருக்கால் சூரியன் பனியாய்க் குளிர்ந்துபோனாலும், சந்திரன் உஷ்ணமாகிக் கொதித்தாலும், அக்கினியின் ஜ்வாலை மேலெழும்பாமல் [தானாய்] கீழ்நோக்கி வீசினாலும், இவையெல்லாம் மாயையின் ஜாலமென அறிந்த ஜீவன்முக்தர், இவைகளால் ஆச்சரியப்படுவதில்லை.  


Even if the sun becomes cool, even if the moon scorches,even if fire burns downward, the jivanmukta knows it to be the work of Maya and  not at all astonished by that. 18.

अज्ञानवैरिविजयी प्रज्ञामातङ्गमस्तकारूढः ।

विहरति संयमिराजः समरससुखधाम्नि सर्वतो रम्ये ॥ १९॥

19. The person who has acquired supreme self-control sports in the extremely beautiful abode of bliss, having conquered the enemy in the form of ignorance, and mounted on the elephant of knowledge.


19. அக்ஞான வைரியை ஒழித்து வெற்றிவாகை சூடிக்கொண்டு, பிரக்ஞையெனும் பட்டத்து யானையின் மேலுச்சிப் பாகத்தில் அமர்ந்து ஸம்யமி* சக்கரவர்த்தி, எல்லாப்புறங்களிலும் அழகு பொலியும் சமரஸ சுக ராஜ்யத்தில் பவனி வருகின்றார்.     

 

* - ஸம்யமம்  என்பது தாரணை-தியானம்-ஸமாதி என்னும் மூன்று யோக அங்கங்களையும் ஒருங்கே குறிக்கும் சொல். அதில் முழு ஆளுமை பெற்றவர் ஸம்யமி. 


The king of renunciates sports in the expanse of equanimity and bliss, riding on top of the head of elephant of Consciousness & Right Knowledge after vanquishing his enemy in the form of ignorance. 19.

शान्ताहंकृतिदोषः सुसमाहितमानसः कोऽपि ।

पूर्णेन्दुशिशिरभावो राजत्यानन्दसत्यचिद्रसिकः ॥ २०॥

20. A rare person who enjoys the state of existence-consciousness-bliss shines, free from the defect of ego, with mind well concentrated, cool like the full moon.


20. எவரோ அரிதாக ஒருவர், அகங்கார தோஷத்தை முற்றிலும் சாந்தப்படுத்தி நீக்கிவிட்டு, மனதை நன்றாக தன்வசத்தில் ஆட்படுத்திக் கொண்டு, ஆனந்த-சத்திய-சித்தினை (பேருணர்வினை) அனுபவிக்கும் ரசிகனாகி, தண்மையான எண்ணங்கள் நிறைந்து பொங்கிப் பூர்ணச்சந்திரனைப் போல ஒளிர்கின்றார்.      

He who delights in Existence-Knowledge-Bliss, shines supreme with the blemish of egoism eradicated, with his mind calm and composed, and with his thoughts cool and pleasant like the full moon. 20.

तिष्ठन्परत्र धाम्नि स्वीयसुखास्वादपरवशः कश्चित् ।

क्वापि ध्यायति कुहचिद्गायति कुत्रापि नृत्यति स्वैरम् ॥ २१॥

21. Immersed in the enjoyment of his own natural bliss, residing in some other abode (in the body which he does not look upon as his), he sometimes meditates, sometimes sings, sometimes dances, at will.


21. எவரோ அரிதாக ஒருவர், தனக்கு அந்நியமான இடத்தில் [சரீரத்தில்] இருந்துகொண்டு, தனக்கு மிகவும் அந்நியோன்னியமாக [அணுவளவுப் பிரிவுமின்றி தானாகவே ஆகியிருக்கும்] அகத்தே சுரக்கும் சுக ஊற்றைப் பருகிக்கொண்டே, தன்னிஷ்டப்படி சில சமயங்களில் தியானிக்கின்றார், சில வேளைகளில் பாடுகின்றார், சில நேரங்களில் ஆடுகின்றார்.      

Fully engrossed in the enjoyment of his own bliss, he remains in divine abode and as he fancies, sometimes he meditates,  sometimes he is singing, and sometimes he is dancing. 21.

अगृहीताघकलङ्कः प्रशमितसङ्कल्पविभ्रमः प्राज्ञः ।

न्यक्कृतकार्यकलापस्तिष्ठत्यापूर्णसीमनि क्वापि ॥ २२॥

22. The enlightened one, untouched by the taint of sin, free from worldly resolutions and confusions, who has negated the assemblage of effects (i.e., realized that the products of Maya have no reality), remains established in the fullness (of Brahman).


22. அரிதாக தூய அறிவைப்பெற்ற எவரோ ஒருவர், களங்கத்தின் தீண்டலை அறவே ஒழித்து, ஆசை சங்கற்பங்கள், விபரீத கற்பனைகளை முற்றிலும் சாந்தப்படுத்தி நீக்கி, காரியங்களின் வகைதொகைகளை அறவே அகற்றிவிட்டு, பூரணநிறைவின் உச்ச  விளிம்பில் இருக்கின்றார்.   

Wherever he may be, the wise one, unblemished by sin and untouched by thoughts and delusions, having discarded even ordained actions, stands secure in the region of perfection. 22.

चपलं मनकुरङ्गं चारु गृहीत्वा विमर्शवागुरया ।

निगमारण्यविहारश्रान्तः शेते स्वधाम्नि कोऽप्येकः ॥ २३॥

23. Having trapped successfully the fickle deer that is the mind in the net of meditation, tired of roaming about in the forest of the Vedas, the wise one rests in his own nature. (He fixes his mind on the Self, withdrawing even from the study of the Vedas when he has acquired the knowledge that is contained in them).


23. எவரோ அரிதாக ஒருவர், வேத சாஸ்திர ஆகமக் காட்டுக்குள் அலைந்து திரிந்துக் களைத்திருக்கும் சஞ்சலமான மன-மானை, ஆத்மவிசாரணை வலையினால் நன்கு வீசிப்பிடித்து, தன்னகத்தேயுள்ள நிலையான பூமியில் நிறுத்தி ஓய்வளித்து அமைந்திருக்கின்றார். 

Having skillfully caught the fickle deer of his mind with the net of enquiry, he, the unique one, reposes in his own abode, tired of hunting in the forests of the Vedas. 23.

दारुणचित्तव्याघ्रं धीरमनःखड्गधारया हत्वा ।

अभयारण्ये कोऽपि स्वैरविहारी जयत्येकः ॥ २४॥

24. An extraordinary person, having killed the cruel tiger that is the mind with the sharp blade of the sword that is the brave intellect, roams about at will in the forest that is fearlessness.


24. எவரோ அரிதாக ஒருவர், பயங்கரமாகப் பாய்ந்துவரும் சித்தமெனும் புலியைத் தெளிவான, உறுதியான, கூரிய அறிவெனும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, பயம்துளியுமின்றி [ஸம்ஸாரக்] காட்டினுள் தன்னிஷ்டப்படி சுற்றி வருகிறார்.


The unique one triumphs, wandering at will in the forest of fearlessness, having felled the dreadful chitta-tiger with the sharp-edged sword of his brave mind. 24

सज्जनहृदयसरोजोन्मीलनकरधीकरप्रसरः ।

एको यतिवरपूषा निर्दोषश्चरति चिद्गगने ॥ २५॥

25. The sun in the form of a great ascetic free from blemish moves in the sky that is pure consciousness, spreading out his rays which make the lotuses in the form of the hearts of the good blossom.


25. யதிசிரேஷ்டர் ஒருவர், சாது ஸத்ஜனங்களின் இதயத் தாமரை இதழ்களை, புஷ்டிதரும் சூரியனைப் போல் தனது பிரகாசமான அறிவார்ந்த ஒளிக்கதிர்களால் மலர்ந்து விரியச் செய்துகொண்டு, நிர்மலமானப் பேருணர்வு (சித்) வானில் சஞ்சரிக்கின்றார்.    

  

Like the spotless sun, the supreme renunciate moves about in the sky of Knowledge and with his abundant thoughts as the rays, causes the lotuses of good men's hearts to bloom. 25.

कुवलयविकासकारणमज्ञानध्वान्तकौमुदीप्रज्ञः ।

शुद्धो मुनीन्द्रचन्द्रः सुरसेव्ये लसति विष्णुपदे ॥ २६॥

26. The moon in the form of the great blemishless sage shines in the abode of Vishnu worshipped by the gods. It is the cause of the blossoming of the water-lily in the form of knowledge and destroys the darkness of ignorance with its light. (The water-lily blossoms when the moon rises).


26. கூம்பியிருக்கும் [இதய] அல்லிமலர்கள் விரியவும், அக்ஞான இருளை விரட்டவும் காரணமான, தூய அறிவாகிய நிலவொளிக் கிரணங்கள் பொழியும் களங்கமற்ற சந்திரனைப் போல, முனீந்திரர் ஒருவர் [முனிவர்களுள் தலையாயவர்], தேவர்களால் [நற்குணங்களால்] வணங்கப்படும் விஷ்ணுபதத்தில் [எங்கும் நிறை வெளியில்] பொருந்திப் பிரகாசிக்கின்றார்.


The great sage shines in the supreme abode of Visnu, fit(only) for the gods,like a spotless moon which causes the blue lilies to bloom; the moonlight of whose wisdom dispels darkness of ignorance. 26.

स्वानन्दामृतसेकैरान्तरसंतापसंततिं शमयन् ।

चित्रमचञ्चलवृत्तिश्चिद्व्योमनि भाति योगिवर्यघनः ॥ २७॥

27. The great yogi shines in the sky of pure consciousness, removing the sorrows in the minds (of others) by the sprinkling of the nectar in the form of his own natural bliss and with his own mind remaining firm without any other thoughts.


27. என்னே ஆச்சரியம்! [காற்றினைப் போலுள்ள] மனோவிருத்திச் சலனங்கள் முழுதும் நிறுத்தப்பெற்ற யோகிகளுள் சிறந்தவர், தொடர்ச்சியாக வந்துறுத்தும் [கர்மவினைத்] தாபங்களை அறவே தணிக்கச் செய்யும், ஆத்மானந்த அம்ருதமழை பொழியும் மேகத்தைப் போலப் பேருணர்வு ஆகாயவெளியில் மின்னுகின்றார். 


The great yogi remains in the vast region of Knowledge like an unmoving cloud and quenches the fire of inward distress by raining the elixir of his own bliss. How wonderful! ! 27.

सुमनःसौरभमञ्जुलसञ्चारनिवारिताखिलश्रान्तिः ।

संयमिचारुसमीरो विहरत्यानन्दसंविदारामे ॥ २८॥

28. He sports in the garden of bliss-consciousness, with all fatigue removed by the spreading of the lovely fragrance of his pure mind and being himself the charming breeze of self-control.


28. ஆனந்த மெய்ஞ்ஞானத் தோட்டத்தில், ஸம்யமியொருவர்* தென்றல் காற்றாய், சகலவித களைப்புகளுக்கும் முழுமையாக நிவாரணம்தரும், தூய மனத்தின் அழகிய [நற்குண] நறுமணத்தினைப் பரப்பிக்கொண்டு உலாவுகின்றார். 

 

* - ஸம்யமம்  என்பது தாரணை-தியானம்-ஸமாதி என்னும் மூன்று யோக அங்கங்களையும் ஒருங்கே குறிக்கும் சொல். அதில் முழு ஆளுமை பெற்றவர் ஸம்யமி. 

 

The recluse, like the gentle wind, wafts pleasantly in the grove of knowledge and bliss, clearing all weariness by carrying with him the fragrance of (divine) flowers (i.e.,enlightened seers). 28.

निःश्रेयससरसफले निर्मलविज्ञानपल्लवमनोज्ञे ।

वीतभये विपिनतले यतिशितिकण्ठो विभाति कोऽप्येकः ॥ २९॥

29. The wonderful peacock that is the ascetic shines in the forest, which is free from fear, in which there is the delicious fruit of liberation, and which captivates the mind with its tender leaves in the form of pure knowledge.


29. இனிய மோக்ஷ பழங்களும், மனத்தைக் கொள்ளைகொள்ளும்  நிர்மலமான மெய்யறிவுத் தளிர்களுமுள்ள மரங்கள் நிறைந்த காட்டில், எந்தவித பயமுமின்றி, எவரோ யதியொருவர் நீலமயிலாய்த் தோகைவிரித்து [ஆனந்தத் தேஜஸை வெளிப்படுத்திக் கொண்டு] பொலிவுடன் ஆடுகிறார்.   


The ascetic dances fearlessly, like a peacock, in a forest filled with the luscious fruits of liberation and the pleasing flowers of perfect knowledge. 29.

निःसारभुवनमरुतलमुत्सार्यानन्दसाररसपूर्णे ।

वरसरसि चिन्मयेऽस्मिन्परहंसः कोऽपि दीव्यति स्वैरम् ॥ ३० ।

30. The supreme swan sports at will in the pure consciousness that is a superb lake which is full of the water of bliss, having abandoned the insubstantial desert that is the world.


30. எவரோ பரமஹம்சர் ஒருவர் சிறந்த அன்னப்பட்சியாய், ஸாரம் சிறிதுமற்ற வறண்டநிலமான இப்புவனத்தை விட்டுப்பறந்து, ஆனந்த ஸார ரஸம் பூரணமாகத் ததும்பும் உன்னத சின்மய ஏரிக்குச் சென்று, அதில் தன்னிஷ்டப்படி குதித்து நீந்தி விளையாடி ஜொலிக்கின்றார்.    

Abandoning this worthless world resembling a desert, the divine swan sports freely in this excellent lake of Knowledge and full of the sweet waters of perfect bliss. 30.

निखिलागमपल्लविते निगमशिरस्तन्त्रशीतलोद्याने ।

मधुरतरमञ्जुवाचः कूजन्नास्ते यतीद्रकलकण्ठः ॥ ३१॥

31. The swan in the form of a great ascetic warble with sweet, lovely words in the cool garden of the upanishads, where all the Vedas have sprouted.

 

31. சகலவித ஆகமங்களும் துளிர்க்கும் வேதத்திற்கு சிரமான உபநிஷத மரங்கள் நிறைந்த குளிர்ந்த சோலையில், அழகிய [நற்கதி தரும் சொற்களை] மதுரமான குரலில், யதீந்திரர் [யதிகளில் தலையாயவர்] குயிலாய்க் கூவிப் பாடிக்கொண்டே இருக்கின்றார்.  


The great recluse, like the cuckoo, sings soft and sweet words in the grove which is made cool by the sacred lore of the upanishads and where all the vedas are in bloom.31.

दारितमोहमदेभो दूरीकृतसकलदुरितशार्दूलः ।

विबुधोत्तमसिंहवरो विहरत्यानन्दविततकान्तारे ॥ ३२॥

32. The lordly lion in the form of the enlightened person sports in the vast forest of bliss, after having torn to pieces the elephant in the form of delusion and pride, and driven away the tiger in the form of all evils.


32. மெய்யனுபூதியுற்றவர் சிறந்த சிம்மராஜனாய், மோகமும் செருக்குமுடைய மதயானையை நார்நாராக கிழித்தெறிந்துவிட்டு, சகல துர்விஷயங்களுக்கு உறைவிடமான புலியை விரட்டிவிட்டு, பரந்துவிரிந்த ஆனந்தக் கானகத்தில் வீறுநடை போட்டுச் சுற்றிவருகிறார்.  


The excellent man of wisdom, like the great lion, sports in the huge forest of bliss, having driven away the tigers of sins and having torn asunder the wild elephant of Moha(delusion./attachment) 32.

अज्ञानमृगवरोज्झितविज्ञानोत्तुङ्गश‍ृङ्गशिखरितले ।

मतिसलिलशीतलाङ्गो यतिमदकलभो विराजते विहरन् ॥ ३३॥

33. The powerful elephant in the form of the ascetic moves about resplendently, at the top of the peak of enlightenment from which the beast of ignorance has been expelled, with mind and body as cool as water.


33. அக்ஞான மிருகங்களை நன்கு மிதித்துக் கொன்றுவிட்டு, தன் சரீரம் மனமிரண்டையும் தண்மையான நீராய்க் குளிர்வித்துக் கொண்டு, யதியொருவர் துடிப்பான இளம் யானையாய், மெய்யறிவென்னும் உயர்ந்த, கவின்மிகு சிகரபீடத்தில் சுற்றிக்கொண்டு ஜொலிக்கின்றார்.    

  

The ascetic plays like a wild young elephant in the high regions of the lofty peaks of supreme Knowledge, from which beast of ignorance has left, having state of mind & body like cool water, 33.

नासाञ्चलनिहिताक्षो नामादिभ्यो निवर्तितस्वान्तः ।

तटिनीतटेषु तत्त्वं ध्यायन्नास्ते यतिः कोऽपि ॥ ३४॥

34. The wonderful ascetic sits on the banks of rivers, meditating on the ultimate Reality, with his eyes fixed on the tip of his nose, and his mind withdrawn from names, etc (names and forms which constitute the whole world).


34. கண்களை மூக்கின் மேல்பாக நுனியில் [புருவ மத்தியில்] அசையாமல் நிறுத்திக் கொண்டு, நாமரூபங்களாலான* அனைத்திலிருந்தும் தனது மனதை முழுவதுமாக விலக்கிக் கொண்டு, அரிதாக எவரோ யதியொருவர் ஆற்றங்கரையொன்றில் மீதமர்ந்து உண்மைத் தத்துவத்தைத் தியானித்து கொண்டிருக்கிறார். 


* - ஜகத் அனைத்தும் நாம ரூபங்களால் ஆனதே.


The sannyasi meditates on the Truth, on the banks of a river, with his eyes fixed on the tip of his nose and with his mind withdrawn from names (and forms). 34

आशावसनो मौनी नैराश्यालङ्कृतः शान्तः ।

करतलभिक्षापात्रस्तरुतलनिलयो मुनिर्जयति ॥ ३५॥

35. Victory to the sage who has for clothing only the directions, who is ever contemplative, who is adorned by freedom from desire, who is calm, who has only his hands as the vessel for receiving alms, and whose dwelling place is the foot of a tree.


35. திசைகளையே ஆடையாக அணிந்துகொண்டு [அதாவது, எங்கும்நிறைத் தன்மைபெற்று], அமைதியாய், நிராசையை அலங்காரமாகத் தரித்துக்கொண்டு சாந்தமாய், அரிதான முனியொருவர், தன் கைத்தலத்தை பிக்ஷா பாத்திரமாகவும், மரத்தடி நிழலை வாசஸ்தலமாகவும் ஏற்றுக்கொண்டு ஜெயமடைகிறார் [பிரகாசிக்கின்றார்].       


The sage shines supreme, silent and placid, with the ground under a tree as his resting place(house) and with his palm as the begging bowl, wearing no clothes, decorated with the jewel of non-attachment. 35.

विजननदीकुञ्जगृहे मञ्जुलपुलिनैकमञ्जुतरतल्पे ।

शेते कोऽपि यतीन्द्रः समरससुखबोधवस्तुनिस्तन्द्रः ॥ ३६॥

36. The great ascetic lies down in a deserted place by the side of a river overgrown with creepers, or on a bed of lovely soft sand, ever awake to the Reality that is bliss-consciousness.


36. நதிதீரத்திலுள்ள ஆளரவமற்ற புதர்மண்டிக்கிடக்கும் இடத்தை  கிருஹமாகவும், அழகிய நதிக்கரையிலுள்ள சீரான மணல்மேட்டை படுக்கையாகவும் அமைத்துக்கொண்டு, அரிதாக எவரோ யதீந்திரர் ஒருவர், என்றும்புதிய ஸமரஸ மெய்ஞ்ஞான போத சுகத்தினில் என்றும் விழிப்புணர்வுடன் சயனித்திருக்கின்றார்.       

 

The great recluse, who has awakened to perfect knowledge and bliss,rests in his house, which is the deserted creepers & bushes on the river bank, on the comfortable bed of soft sands. 36.

भूतलमृदुतरशय्यः शीतलवातैकचामरः शान्तः ।

राकाहिमकरदीपो राजति यतिराजशेखरः कोऽपि ॥ ३७॥

37. The king among ascetics shines with the soft earth for bed, fanned by the cool breeze, calm in mind, and with the full moon for lamp.


37. இதமான குளிர்க்காற்று சாமரம் வீசவும், முழு தண்மதி தீபமேற்றவும், மிருதுவான நிலத்தைப் படுக்கையாக அதில் சயனித்துக்கொண்டு, எவரோ அரிதாக ஒருவர் யதியரசர்களுள் சூடாமணியாய்ப் பிரகாசிக்கின்றார்.    


The king among sannyasies shines forth, resting serenely on the soft bed of bare ground, with the cool breeze serving as a fan,with calmness and with the full moon as a lamp. 37.

विपुलशिलातलफलके विमलसरिद्वारिपरिवृतोदारे ।

मन्दं मलयजपवने वाति प्रस्वपिति कोऽपि यतिराजः ॥ ३८॥

38. The great ascetic sleeps on a large floor of stone, surrounded by the pure water of a stream, where a gentle mountain breeze blows.


38. தூய நீரோடை சூழ்ந்துசெல்லும் பெரிய கற்பாறைத் தளத்தின் மீது, மலயமாருதம் மெதுவாக வீசி தன்னைத் தழுவ, அரிதான யதிராஜர் ஒருவர் படுத்திருக்கின்றார்.


The king of ascetics sleeps peacefully on a broad slab of stone, beautifully shaped by the pure waters of the river owing beside it, while the breeze from the Malaya hills, blows gently. 38.

आन्तरमेकं किञ्चित्सन्ततमनुसन्दधन्महामौनी ।

करपुटभिक्षामश्नन्नटति हि वीथ्यां जडाकृतिः कोऽपि ॥ ३९॥

39. The great sage, always meditating on the indescribable One, roams about in the streets eating just a handful of rice received as alms, appearing outwardly like an inert thing.


39. அரிதாக எவரோ ஒருவர், மனச்சலனம் அறவேயற்று மஹா மௌனியாய், தன்னகத்தே இடையறாமல் எப்போதும் இரண்டற்ற ஏக தத்துவத்தை அனுசந்தானம் செய்துகொண்டு, கையில் பிக்ஷையாக கிடைப்பதை உணவாக ஏற்றுக்கொண்டு, வீதியில் ஒன்றுமறியா ஜடத்தைப் போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்.   

 

The (profoundly) silent sage, ever engaged in inward meditation, takes the alms placed in his hands as food and wanders along the streets like an idiot. 39.

प्रविलाप्य जगदशेषं परिशिष्टाखण्डवस्तुपरतन्त्रः ।

प्राश्नाति कवलमास्ये प्राप्तं प्रारब्धकर्मणा कोऽपि ॥ ४०॥

40. After having merged the entire universe, surrendering himself to the part-less Reality which remains, he eats just a morsel of food got due to his praarabdha karma.


40. அரிதாக எவரோ ஒருவர், ஜகத் அனைத்தையும் மிச்சமில்லாமல் தன்னுள்ளே [புத்தியால்] ஒடுக்கி, எஞ்சியிருக்கும் அகண்ட தத்துவம் ஒன்றையே ஆதீனமாகக் கொண்டு, தனது பிராரப்த கர்மத்தினால் கிடைக்கும் ஒரு வாயளவு கவளத்தை அவ்வப்போது உட்கொள்கிறார். 


Being the vast reality  that remains after dissolving the world entirely (with right knowledge), he eats the handful of food which comes to him by prarabdha karma. 40.

निन्दति किमपि न योगी नन्दति नैवापरं किमप्यन्तः ।

चन्दनशीतलहृदयः कन्दलितानन्दमन्थरः स्वास्ते ॥ ४१॥

41. The yogi does not censure anybody, nor does he praise anyone. His heart is cool like sandal paste. The treasure of bliss sprouts in him.


41. அகத்தே பீறிட்டுப் பொங்கும் ஆனந்தப் பேரூற்றில் தோய்ந்து, தனது இதயத்தை சந்தனம்போல குளிர்வித்துக்கொண்ட யோகியானவர், யாரையும் நிந்திப்பதுமில்லை, எவரையும் நாடிப் புகழ்வதுமில்லை.  


The yogi does not censure anything; nor does he really rejoice in anything. With a perfectly cool heart, he remains as a mass of over flowing bliss. 41.

सन्त्यज्य शास्त्रजालं संव्यवहारं च सर्वतस्त्यक्त्वा ।

आश्रित्य पूर्णपदवीमास्ते निष्कम्पदीपवद्योगी ॥ ४२॥

42. The yogi remains like an un-flickering flame, having renounced (study of) all the scriptures, given up worldly activities of all kinds, and having attained the state of fullness.


42. [பல்வேறு கருத்துக்களைக் கொண்ட] சாஸ்திரங்களை ஆராய்வதை அறவே விட்டுவிட்டு, [ஆசையால் உந்தப்பட்டுச் செய்யும்] காரிய விவகாரங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு,  யோகியானவர் பூரணநிலை ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு, அசையாத தீபச்சுடர் போல் நிலையாக இருக்கின்றார்.

  

The yogi remains in a state of plenitude, like an unruffled lamp, having cast aside all scriptural argumentation and having completely rejected (even) ordained duties. 42.

तृणपङ्कचर्चिताङ्गस्तृणमिव विश्वं विलोकयन्योगी ।

विहरति रहसि वनान्ते विजरामरभूम्नि विश्रान्तः ॥ ४३॥

43. The yogi moves about unnoticed in forests, his body smeared with the mud clinging to the grass, giving the world the same value as to a blade of grass, free from fatigue, having gone beyond old age and death.


43. யோகியானவர், [தரையில் படுத்ததனால்] சேறும்புல்லும் பூசிய அங்கங்களுடன் [தனது அவலட்சணத்தைப் பொருட்படுத்தாமல்], பிரபஞ்சத்தை மதிப்பற்ற புல்லுக்கு சமமாக நோக்கும் பார்வையுடன், மூப்பு, மரணமற்ற நிலையை அடைந்ததனால், [எந்தவித பயமுமின்றி] விஸ்ராந்தனாக, [ஸம்ஸார] வனத்தில் ரகசியமாக [பிறர்பார்வை படாமல்] சுற்றிவருகிறார். 

  

Taking rest in the outskirts of the forest and regarding the entire universe as (insignificant as) a mere blade of grass, the yogi free of fatigue, his body smeared with mud and straw,delights in the state beyond old age and death.43.

पश्यति किमपि न रूपं न वदति न श‍ृणोति किञ्चिदपि वचनम् ।

तिष्ठति निरुपमभूमनि निष्ठामवलम्ब्य काष्ठवद्योगी ॥ ४४॥

44. The yogi remains like a log of wood in a steady posture, in an incomparable manner, not seeing any form whatever, and not speaking or hearing any word.


44. யோகியானவர் எந்தவித ரூபத்தையும் காண்பதில்லை, எந்தவொரு பேச்சையும் கேட்பதில்லை, பேசுவதுமில்லை; நிஷ்டையிலமர்ந்து ஒப்பற்ற பெருநிலத்தில் நிலைகொண்டு, அசையாத மரக்கட்டை போல் பிறர்க்குக் காட்சியளிக்கிறார்.


The yogi sees nothing, nor does he speak; he does not hear any word that is spoken; he remains immersed steadfast in the incomparable abode, unmoving like a log of wood.44.

जात्यभिमानविहीनो जन्तुषु सर्वत्र पूर्णतां पश्यन् ।

गूढं चरति यतीन्द्रो मूढवदखिलागमार्थतत्त्वज्ञः ॥ ४५॥

45. The great ascetic moves about unnoticed, free from any pride about his lineage, seeing the fullness (Brahman) in all creatures everywhere, appearing like an ignorant man though aware of the truth of all the Vedas.


45. [மனநிலை] ஜாதி* வித்தியாசம் அறவேயின்றி, எல்லாவிடங்களிலும், எல்லா ஜீவராசிகளிலும் பூரணத்தையே பூரணமாகப் பார்த்துக்கொண்டு, எல்லாவித ஆகமங்களின் லட்சியமான மெய்ப்பொருளை அறிந்தவராயினும், மூடனைப் போல் மறைவாக [அவர்நிலையைப் பிறரறியாமல்]  சுற்றிவருகிறார்.  


* - மூலத்தில் "ஜந்து" என்ற பதத்தை கையாண்டிருப்பதனால், இங்கு 'ஜாதி' என்ற சொல்லைப் பல்வகை உயிரினங்களாகவும் [உ-ம், மனிதர், பறப்பன, ஊர்வன,  என] கொள்ளலாம்.  

 

The great sannyasi, who knows the truth of all the vedas, wanders like an ignorant fool, unnoticed, devoid of any sense of cast difference, seeing only perfection everywhere and in all creatures. 45.

उपधाय बाहुमूलं परिधायाकाशमवनिमास्तीर्य ।

प्रस्वपिति विरतिवनितां परिरभ्यानन्दपरवशः कोऽपि ॥ ४६॥

46. With his shoulder for pillow, the earth for bed, and the sky for covering, he sleeps, overwhelmed by bliss, embracing the damsel of detachment.


46. அரிதாக எவரோ [யோகி] ஒருவர், தனது கையைத் தலைமாட்டில்  வைத்துத் தலையணையாகக் கொண்டு, ஆகாசத்தைப் போர்வையாகவும், நிலத்தைப் படுக்கையாகவும் கொண்டு, [வேறெதையும் வேண்டாத] வைராக்கியமெனும் வனிதையைக் கட்டித்தழுவிக் கொண்டு, ஆனந்தப் பரவசத்தில் படுத்திருக்கின்றார்.

  

Embracing the lady called detachment, engulfed in bliss,he sleeps using his shoulder for a pillow, with the sky as a blanket and with the bare ground as a bed. 46.

गतभेदवासनाभिः स्वप्रज्ञोदारवारनारीभिः ।

रमते सह यतिराजस्त्रय्यन्तान्तःपुरे कोऽपि ॥ ४७॥

47. The wonderful king of ascetics sports in the inner apartments of the upanishads with the lovely courtesans in the form of his own consciousness from which the notions of difference have departed.


47. அரிதாக எவரோ யதியரசர் ஒருவர், மெய்ப்பொருள் ஒன்றைத் தவிர வேறாக மற்றதைக் காணும் பேத வாசனைகள் அறவே நீங்கப் பெற்று, வேதாந்த மறைபொருள்களாலான அந்தப்புரத்தில், தன் மெய்யறிவின் ஸ்புரணங்களெனும் உயர்ந்தகுணமுடைய பெண்களுடன் கூடி ரமிக்கின்றார். 


In the inner appartments of the upanisads, the king of sannyasies, having dropped all ideas of duality, enjoys playing in the company of lovely women of his own vast Self-knowledge. 47.

वैराग्यविपुलमार्गं विज्ञानोद्दामदीपिकोद्दीप्तम् ।

आरुह्य तत्त्वहर्म्यं मुक्त्या सह मोदते यतिराट् ॥ ४८॥

48. Having ascended to the mansion of Realty through the broad path of detachment well illuminated by the powerful lamp of knowledge, the great ascetic enjoys with the damsel in the form of liberation.


48. யதிசாம்ராட் ஒருவர், வைராக்கியமெனும் விசாலமான மார்க்கத்தில், மெய்யறிவென்னும் நன்கு எரியுமாறு தூண்டப்பட்ட உத்தமமான விளக்குடன் பயணித்து, மெய்ப்பொருளெனும் பெரிய அரண்மனைக்குள் குடியேறி, முக்தியெனும் கன்னிகையுடன்  கூடி மகிழ்கிறார்.   


The king among renunciates enjoys the company of damsel of liberation, in the lofty mansions of the Truth, which is reached by the broad path of dispassion well lit by the bright lamp of supreme Knowledge. 48.

विजनतलोत्पलमालां वनितावैतृष्ण्यकल्पवल्लीं च ।

अपमानामृतगुटिकामात्मज्ञः कोऽपि गृह्णाति ॥ ४९॥

49. The knower of the self wears a garland of lotuses in the form of places unfrequented by people, is adorned by the wish-yielding creeper in the form of detachment towards women, and consumes the pill of nectar in the form of dishonour (by the ignorant). (The idea is that he stays only in deserted places, is not at all attracted by sensual pleasures and welcomes dishonour rather than honour).


49. ஆளரவமற்ற தலத்தை அல்லிமலர்ப் பூமாலையாகவும், பெண்ணாசையை அறவே அறுத்தலை [எல்லாம் தரும்] கற்பகக் கொடியாகவும், பிறரிழைக்கும் அவமானத்தை [பவரோக நிவாரண மருந்தான] அமிர்தக் குளிகையாகவும், ஆத்மாவை அறிந்துணர்ந்தவர் ஏற்றுக்கொள்கின்றார்.

  

The knower of the Self accepts the rows of blue lily flowers in lonely places as his japa mala, the absence of desire towards women as the divine wish yielding creeper and the absence of egoism in the face of humiliation as the medicine for immortality. 49.

न निषेधति दोषधिया गुणबुद्ध्या वा न किञ्चिदादत्ते ।

आविद्यकमखिलमिति ज्ञात्वोदास्ते मुनिः कोऽपि ॥ ५०॥

50. The sage does not reject anything on the ground that it is harmful, nor does he accept anything on the ground that it is favourable. Knowing that everything is the product of ignorance, he is indifferent. (He is completely free from notions of likes and dislikes, of what is favourable and what is not).


50. இவை தோஷமெனக் கருதி வெறுக்காமலும், இவை நற்குணமானவையெனக் கருதி விரும்பி ஏற்றலுமின்றி, அரிதான முனிவர் ஒருவர், அகிலப்  பிரபஞ்சமுமே அவித்யையின் கூறே என  நன்கறிந்ததனால், வேண்டுதல் வேண்டாமையின்றி இவைகளைப் பொருட்படுத்துவதில்லை. 

  

The sage rejects nothing, considering it bad; nor does he accept anything, considering it good. Knowing that everything is the creation of avidya, he remains unattached to everything. 50.

भूतं किमपि न मनुते भावि च किञ्चिन्न चिन्तयत्यन्तः ।

पश्यति न पुरोवर्त्यपि वस्तु समस्तार्थसमरसः कोऽपि ॥ ५१॥

51. His mind does not dwell on anything that has happened in the past, nor does he think about the future. He does not see even the things in front of him, considering everything as the same (Brahman).


51. அரிதாக எவரோ ஒருவர், மெய்ப்பொருளையே எல்லாவற்றிலும்,  [எப்போதும்] ஸமரஸமாகப் பார்ப்பதினால், எந்தவொரு கடந்தகால நிகழ்வையும் நினைப்பதில்லை; வருங்காலத்தைப்  பற்றிக் கொஞ்சமும் சிந்திப்பதுமில்லை; கண்ணெதிரில் நிகழ்வதையும்  கவனிப்பதில்லை. 

He does not think at all of what is past, nor does he care in his mind about the future. He does not even see what is in front of him, for he sees (only) the blissful essence in everything. 51.

निगृहीताखिलकरणो निर्मृष्टाशेषविषयेहः ।

तृप्तिमनुत्तमसीमां प्राप्तः पर्यटति कोऽपि यतिवर्यः ॥ ५२॥

52. The great ascetic moves about, with all organs under control, devoid of desire for all sense-objects, and having attained the summit of supreme satisfaction.


52. எல்லாக் கருவிகரணங்களையும்  தன்னுள்ளே ஆன்மவசத்தில் அடங்கச்செய்து, ஒன்றுவிடாமல் எந்தவொரு [அனாத்மா] விஷயத்தின்மீதும் விருப்பமின்றி, ஒப்புயர்வற்ற திருப்தியின் உச்சத்தினை அடைந்து, அரிதாக எவரோ யதி சிரேஷ்டர்  ஒருவர் சுற்றிவருகிறார். 

  

The best of sannyasies, having subdued all his sense organs and having wiped out all traces of attachment to sense objects, roams about having attained incomparable contentment. 52.

सन्त्यजति नोपपन्नं नासम्पन्नं च वाञ्छति क्वापि ।

स्वस्थः शेते यतिराडान्तरमानन्दमनुभवन्नेकः ॥ ५३॥

53. The great sage stays alone, calm in mind, enjoying his internal bliss, not rejecting anything that comes, nor desiring anything that he has not got.


53. சுயமுயற்சியின்றி தனக்குக் கிடைத்ததை வெறுத்து விட்டுவிடாமலும், தனக்குக் கிட்டாத எதனொன்றின் மேலும் விருப்பம்கொள்ளாமலும், அரிதாக எவரோ யதிசாம்ராட் ஒருவர், தன்னுள்ளத்தில் நிலைப்பெற்று, கைவல்ய ஆனந்த அனுபவத்தை உள்ளே அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.   


The king of sannyasies rests alone, established in the Self and enjoying inner bliss; he rejects nothing that comes to him and never desires what does not come to him. 53.

कामपि विमलां पदवीमासाद्यानन्दसंविदुन्निद्राम् ।

आस्ते भिक्षुक एको विहरन्निर्मुक्तबन्धनः स्वैरम् ॥ ५४॥

54. Having attained a pure indescribable state of bliss, consciousness and wakefulness, the ascetic moves about alone, at will, free from all bonds.


54. அசாத்தியமான தூய, ஆனந்த மெய்ஞ்ஞான நிலைக்கு மாயைத் தூக்கத்திலிருந்து விழிப்புணர்வு பெற்ற அரிதாக எவரோ ஒருவர்,  [எந்த இருப்பிடத்தையும் தனதாக ஆக்கிக் கொள்ளாமல்] பிக்ஷுவாய் தனிமையொருமையில், [அனைத்து] கர்மபந்தங்களிலிருந்தும் விடுபட்டுக்கொண்டு தன்னிஷ்டப்படி சுற்றுகிறார். 


Alone, the mendicant disports himself as he pleases, free from (all) bondage, having reached the stage of perfection, which is pure and limitless knowledge and bliss. 54.

वस्तुन्यस्तमिताखिलविश्वविहारे विलीनमनाः ।

राजति परानपेक्षो राजाऽखिलवीतरागाणाम् ॥ ५५॥

55. The king among those who have become free from all attachments shines, not dependent on any one, with his mind merged in the Reality in which all worldly activities have been sublated.


55. லோக விவகாரங்கள் அனைத்தையும் மெய்ப்பொருளில் அஸ்தமனம் செய்வித்து, மனத்தை அடியோடு லயமாக்கி, வேறு யாரொருவரையும் சார்ந்திராமல், வைராக்கியமான சாதுக்கள் எல்லாருள்ளும் ராஜாவாய் ஜொலிக்கின்றார்.  

 

The king of all those who are free from desires, shines supreme, depending on no one and with his mind lost in the Truth, which is beyond the entire universe of appearances. 55.

आचार्यापाङ्गदृशा समवाप्तापारसंविदाकारः ।

प्रशमितसकलविभेदः परहंसः कश्चिदाभाति ॥ ५६॥

56. The ascetic of the highest order shines, having realized his identity with the infinite Consciousness by the side-glance of his Guru, and having become free from all notions of difference.


56. ஆச்சாரியரின் கடைக்கண் பார்வையால், சகலவித வேற்றுமைகளும் முழுதுமாக நீங்கப்பெற்று, ஒப்பற்ற மெய்ஞ்ஞான ரூபமாகவே ஆக வாய்க்கப்பெற்ற அரிதாக எவரோ ஒருவர் பரமஹம்சராய்ப் பிரகாசிக்கின்றார். 


The paramahamsa shines forth, having reached the form of endless Knowledge and having lost all sense of difference due to the compassionate glance of his teacher. 56.

वर्णाश्रमव्यवस्थामुत्तीर्य विधूय विद्यादीन् ।

परिशिष्यते यतीन्द्रः परिपूर्णानन्दबोधमात्रेण ॥ ५७॥

57. Going beyond the shackles of varna and ashrama, and beyond such limitations as fate, etc., the great ascetic remains as pure bliss and consciousness.


57. வர்ணாசிரமநிலைகளைக் கடந்து அவற்றின் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு, [சாமான்ய மக்களின் ஆன்மமுன்னேற்றத்திற்கென  விதித்த] விதி விலக்குகளை  எல்லாம் [அவைகளின் தேவை பூர்த்தியுற்றதால்] ஒதுக்கிவிட்டு, யதீந்திரர் ஒருவர் பரிபூரண ஆனந்த மெய்ஞ்ஞான போதத்தினாலே தான் சூழப்பெற்று, அதிலொன்றிலேயே எப்போதும் இருந்து வருகின்றார்.      


The great renunciate transcends the rules of varna and asrama, discarding all injunctions, prohibitions and such limitations as fate,  he remains merely as the infinite bliss of pure Consciousness.57.

क्षयमुपनीय समस्तं कर्म प्रारब्धमुपभुज्य ।

प्रविगलितदेहबन्धः प्राज्ञो ब्रह्मैव केवलं भवति ॥ ५८॥

58. Having brought to an end all action, and having exhausted his praarabdha, freed from association with the body, the enlightened person becomes Brahman itself.


58. தூய மெய்யறிவாளர் ஒருவர், எல்லா பிராரப்த கர்மபலன்களையும்  அனுபவித்துக் கழித்துவிட்டு, அனைத்து கர்மவினைகளையும் அழித்துநீக்கிவிட்டு, தேகபந்தங்களை முழுதும் அறுத்துத் தள்ளிவிட்டு, ஒன்றேயான தன்னந்தனி மெய்ப்பொருளாகவே ஆகி நிற்கின்றார்.

     

Enjoying the fruits of prarabdha karma, the wise man destroys all karmas and having dropped (all) the bonds which bind him to a body, he becomes verily the (absolute) Brahman. 58.

स्तिमितमनन्तमनाद्यं सन्ततमानन्दबोधघनम् ।

अविकल्पमाद्यमेकं सन्मात्रं विद्यते किमपि ॥ ५९॥

59. There is only the indescribable pure existence, calm, without beginning or end, ever a mass of bliss and consciousness, immutable, primordial, and non-dual.


59. நடுவுநிலையில் ஸ்திரமாக [எப்போதும்] இருப்பதும், முடிவற்றதும், தொடக்கமற்றதும், மாண்புமிக்க ஆனந்த மெய்ஞ்ஞான போதமாக எப்போதும் இருப்பதும், கற்பனைக்கு எட்டாததும், எல்லாவற்றின் மூலத்தோற்றுவாயாகவும், [இரண்டற்ற] ஒன்றேயாயும், பேருண்மையாக மட்டுமே இருப்பதாகவும் [மெய்ப்பொருள்] அறியப்படுகின்றது.  

The ancient, serene and immutable one, with no beginning or end, always remains as a mass of Knowledge and Bliss, and of the nature of pure existence. 59.

अक्षरमजरमजातं सूक्ष्मतरापूर्वशुद्धविज्ञानम् ।

प्रगलितसर्वक्लेशं परतत्त्वं वर्तते किमपि ॥ ६०॥

60. There is the supreme Reality that is imperishable, un-decaying, unborn, extremely subtle, absolutely pure consciousness, free from all misery.


60. அழிவில்லாததும், மூப்பில்லாததும், பிறப்பில்லாததும், அதிசூட்சுமமானதும், முன்காணா என்றும் புதிய தூய மெய்யறிவானதும், எந்தவித துன்பக் கிலேசங்களும் இல்லாததுமாக,  பரமான மெய்ப்பொருள் இருக்கின்றது.

    

The ultimate Truth, imperishable, unaging and unborn, extremely subtle, without any cause and devoid of all distress, exists as pure Consciousness. 60.

सुखतरममरमदूरं सारं संसारवारिधेस्तीरम् ।

समरसमभयमपारं तत्किञ्चन विद्यते तत्त्वम् ॥ ६१॥

61. There is that indescribable Reality which is supremely blissful, immortal, not distant, the very essence, the shore of the ocean of transmigratory existence, homogeneous, free from fear, and infinite.


61. சிறந்த மேலான சுகமாகவும், மரணமில்லாததும், சிறிது தூரம்கூட விலகி இல்லாததும் [தானாக ஆகியிருப்பதும்], அனைத்தின் ஸாரமாகவும், ஸம்ஸார சாகரத்திலிருந்து மீண்டுசெல்வதற்கான கரையாகவும், சமநிலையில் என்றுமிருப்பதும், பயமில்லாததும், ஒப்பிலாததுமாக மெய்ப்பொருள் அறியப்படுகின்றது


That (supreme) Truth, which is the highest bliss,deathless and ever near, the very essence, the other shore of the ocean of samsara, exists as the endless, fearless and equanimous bliss.  61.

अरसमगन्धमरूपं विरजस्कमसत्त्वमतमस्कम् ।

निरुपमनिर्भयतत्त्वं तत्किमपि द्योतते नित्यम् ॥ ६२॥

62. The indescribable Reality shines eternally. It has no taste, or smell or form. It is beyond the three gunas - sattva, rajas and tamas. It is incomparable (because there is no other to be compared with) and beyond all fear.


62. சுவை, மணம், ரூபம், [ஓசை, ஊறு] இல்லாததும், ரஜஸ், சத்வ, தமஸ் குணங்களற்றதும், ஒப்புமையற்றதும் , பயமற்றதுமான மெய்ப்பொருள் எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றது.

 

Devoid of taste, smell and form, free of sattva, rajas and tamas gunas, the incomparable and fearless, indescribable Brahman shines forever. 62.

---

इति गुरुकरुणापाङ्गादार्याभिर्द्व्यधिकषष्टिसङ्ख्याभिः ।

निरवद्याभिरवोचं निगमशिरस्तन्त्रसारभूतार्थम् ॥ ६३॥

63. Thus, by the gracious compassionate side-glances of my Guru I have brought out the essence of the upanishads in sixty-two faultless verses in the Arya metre.


63. இவ்விதம், குருவின் கடைக்கண் பார்வைக்கருணையினால், வேதசிரமான உபநிஷத தத்துவார்த்த சாரம் உட்பொதிந்த அறுபத்திரண்டு சுலோகங்கள், 'ஆர்யா' எனும்  சந்தஸில் [செய்யுட் பாவில்] தோஷமில்லாமல் மொழியப்பட்டது. 

        

Thus, blessed with the gracious glance of my guru, I have spoken of the essence of the true meaning of the upanisads in sixty two flawless verses composed in the arya metre.63.

गदितमिममात्मविद्याविलासमनुवासरं स्मरन्विबुधः ।

परिणतपरात्मविद्यः प्रपद्यते सपदि परमार्थम् ॥ ६४॥

64. By meditating on this Atmavidyavilasa composed (by me) everyday the wise man acquires knowledge of the supreme Self and attains to the Reality. .


64. முன்சொல்லப்பட்ட இந்த ஆத்ம வித்யா விலாசத்தை நல்லறிவு வாய்த்த ஒருவர் தினந்தோறும் ஸ்மரணம் செய்தால், அவர் மேலான ஆத்மவித்யையில் வளர்ச்சிபெற்று, விரைவில் பரம்பொருளை அடைவார்.   

The wise man, who contemplates on this work describing the splendor of Atmavidya everyday, will grow mature in the wisdom of the supreme Self and reach at once the ultimate Truth. 64.

परमशिवेन्द्रश्रीगुरुशिष्येणेत्थं सदाशिवेन्द्रेण ।

रचितेयमात्मविद्याविलासनाम्नी कृतिः पूर्णा ॥ ६५॥

65. This work, named Atmavidyavilasa, composed by Sadasivendra, the disciple of the Guru Paramasivendra is thus completed. .


65. ஸ்ரீ குரு பரமசிவேந்திரரின் சிஷ்யரான ஸதாசிவேந்திரரால் இயற்றப்பட்ட இந்த ஆத்மவித்யா விலாஸம் என்ற பெயர்கொண்ட க்ருதி [செய்யப்பட்ட ஒன்று] இத்துடன் சம்பூரணமாகின்றது.

Thus ends this work called Atma vidya vilasa composed by Sadasivendra, a disciple of the guru Paramsivendra. 65.

इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्य-

श्रीपरमशिवेन्द्रसरस्वतीपादाब्जसेवापरायण-

श्रीसदाशिवेन्द्रसरस्वत्या विरचितः

आत्मविद्याविलासः समाप्तः ॥


இவ்விதம், ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆச்சாரியார் ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி அவர்களின் பாதக் கமலங்களுக்கு சேவை செய்வதையே உன்னதலட்சியமாகக் கொண்ட ஸ்ரீ ஸதாசிவேந்திர ஸரஸ்வதி அவர்களால் இயற்றப்பட்ட ஆத்மவித்யா விலாஸம் முடிவு பெறுகிறது.


ஓம் தத் ஸத்! ப்ரஹ்மார்ப்பணமஸ்து!

---

Powered by Blogger.