Holy Kural - 066
66. வினைத்தூய்மை - Purity of action
1. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். Friendship brings gain; but action pure Does every good thing we desire. V# 651 2. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. Eschew always acts that do not Bring good nor glory on their part. V# 652 3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். Those in the world desire for fame Should shun the deed that dims their name. V# 653 4. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device. V# 654 5. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. Do not wrong act and grieve, 'Alas' If done, do not repeat it twice. V# 655 6. ஈன்றான் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers. V# 656 7. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice. V# 657 8. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். Those who dare a forbidden deed Suffer troubles though they succeed. V# 658 9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow. V# 659 10. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase. V# 660
Post a Comment