W158. ஒவ்வொருமுறை என் பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன்.(Whispers from Eternity - Tamil & English)
158. ஒவ்வொருமுறை என் பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன்.
தந்தையே, உனக்காக ஏங்கும் என் ஏக்கக்கடலுள் பெரும்சோதனைச் சூறாவளிகளினால் அலைக்கழிக்கப்பட்டு நான் நீந்திக் கொண்டிருக்கின்றேன். சுக-துக்கமெனும் அலைகளின்மேல் நான் மிதந்தாலும், அலட்சியமெனும் ஆழத்திற்கு நான் அமிழ்ந்தாலும், நான் உன் கரையில்லாக் கரையையே தேடிக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொருமுறை நான் பலமாக பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன். நான் ஒருக்காலும் நீந்துவதிலிருந்து ஓயமாட்டேன், ஏனெனில் நீ என் வருகைக்காகக் காத்துக் கொண்டே இருக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
158 With every stroke of my Prayer, I am moving nearer to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org