Holy Kural - 105
105. நல்குரவு - Poverty
1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. What gives more pain than scarcity? No pain pinches like poverty. V# 1041 2. இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். The sinner Want is enemy dire Of joys of earth and heaven there. V# 1042 3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. The craving itch of poverty Kills graceful words and ancestry. V# 1043 4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். Want makes even good familymen Utter words that are low and mean. V# 1044 5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். The pest of wanton poverty Brings a train of misery. V# 1045 6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். The poor men's words are thrown away Though from heart good things they say. V# 1046 7. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். Even the mother looks as stranger The poor devoid of character. V# 1047 8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. The killing Want of yesterday Will it pester me even to-day? V# 1048 9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. One may sleep in the midst of fire In want a wink of sleep is rare. V# 1049 10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. Renounce their lives the poor must Or salt and gruel go to waste. V# 1050
Post a Comment