W47. எங்கும்நிறைப் பரவெளித் தொட்டிலில் எனையிட்டுத் தாலாட்டு. (Whispers from Eternity - Tamil & English)
47. எங்கும்நிறைப் பரவெளித் தொட்டிலில் எனையிட்டுத் தாலாட்டு.
உன் நிரந்தரத்தின் குழந்தையான நான், நீலவண்ணக் கடந்தகால, பளீரெனத் துலங்கும் நிகழ்கால, மங்கலான தூசரநிற (grey) வருங்காலத் தொட்டிலிலிட்டு ஆட்டுவிக்கப்பட்டு, இப்போது அமைதியின்றி சஞ்சலப்படுகின்றேன்.
நான் ஆற்றல்கொண்ட என் கால்களை அதில் திறனின்றிப் பிரயோகித்துச் சுழுக்கிக்கொண்டேன், ஆனால் ஒருவழியாக முயன்று கடைசியில் நான் அந்த இருமையின் மருட்தூளியிலிருந்து எகிறிக்குதித்து விட்டேன். நீ உன் எல்லையற்ற கரங்களினால் என்னைப் பிடித்துக்கொண்டு, எங்கும்நிறைப் பரவெளியில் என்னைத் தாலாட்டினாய்.
நான் உன் எங்கும்நிறை நெஞ்சகத் தொட்டிலில் பத்திரமாகக் காக்கப்படும் உன் நிரந்தரத்தின் சிசு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
47 Rock me in the cradle of all space.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org