Holy Kural - 040
40. கல்வி - Education
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly. V# 391 2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. Letter, number, art and science Of living kind both are the eyes. V# 392 3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். The learned alone have eyes on face The ignorant two sores of disgrace. V# 393 4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் To meet with joy and part with thought Of learned men this is the art. V# 394 5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் Like poor before rich they yearn For knowledge; the low never learn. V# 395 6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows. V# 396 7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. All lands and towns are learner's own Why not till death learning go on! V# 397 8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து The joy of learning in one birth Exalts man upto his seventh. V# 398 9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். The learned foster learning more On seeing the world enjoy their lore. V# 399 10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. Learning is wealth none could destroy Nothing else gives genuine joy. V# 400
Send Your Comments to phdsiva@mccrf.org