MCCRF - A global volunteer network

Holy Kural - 024

24. புகழ் - Renown




1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு They gather fame who freely give The greatest gain for all that live. V# 231 2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் The glory of the alms-giver Is praised aloud as popular. V# 232 3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver! V# 233 4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு From hailing gods heavens will cease To hail the men of lasting praise V# 234 5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது Fame in fall and life in death Are rare but for the soulful worth. V# 235 6. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று Be born with fame if birth you want If not of birth you must not vaunt. V# 236 7. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். Why grieve at those who blame the shame Of those who cannot live in fame? V# 237 8. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறா விடின் To men on earth it is a shame Not to beget the child of fame. V# 238 9. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் The land will shrink in yield if men O'erburden it without renown. V# 239 10. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் They live who live without blemish The blameful ones do not flourish. V# 240

 

Powered by Blogger.