Holy Kural - 001
1. கடவுள் வாழ்த்து - The praise of God
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world. V# 1 2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் That lore is vain which does not fall At His good feet who knoweth all. V# 2 3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் Long they live on earth who gain The feet of God in florid brain. V# 3 4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல Who hold His feet who likes nor loathes Are free from woes of human births. V# 4 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night. V# 5 6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் They prosper long who walk His way Who has the senses signed away. V# 6 7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind. V# 7 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea. V# 8 9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine. V# 9 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் The sea of births they alone swim Who clench His feet and cleave to Him. V# 10
Send Your Comments to phdsiva@mccrf.org