W201. எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
201. எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.
நெடுங்காலத்திற்கு முன் நான் ஒரு மனோ டார்ச்விளக்கை உபயோகம் செய்து கொண்டிருந்தேன். அதனைக் கணத்திலே வேலைபார்க்குமாறு செய்வேன், உடனே அது தேடும்-ஒளிக்கீற்றை வீச ஆரம்பிக்கும். அவ்வொளியில் நான் தேடிப் பலப்பல பொன்னிறமாய் ஜொலிக்கும் ஆக்கப்பூர்வ-சிந்தனைப்-பொடிமீன்களை பிடித்துள்ளேன்.
அவற்றைத் தூண்டில்புழுவாக வைத்து என் உணர்வுநிலைக் கடலிலுள்ள பெரிய கடல்வாழினங்களையும் பிடித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருக்கும், மேலும் என் விளக்குபொருந்திய வலையின் சுற்றளவு சிறிதாக இருந்ததால், பல நயமான வகைகள் நழுவிவிட்டன.
இப்போது, நான் பல டார்ச்விளக்கு-வலைகளை அடுக்கி ஒரு கட்டாக சுமந்துசெல்கின்றேன். அவைகளை நான் எல்லோரிடமுமிருந்து, பொன்னால் பின்னப்பட்ட கனவுகளினாலும், வெள்ளியினாலான பாடல்களினாலுமான அரிய நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளேன். எண்ணற்ற இந்த விளக்குபொருந்திய இழு-வலைகளை எல்லாம் ஒருங்கே பின்னி, நான் உன் ஞானக் கடலில் வலைவீசுவேன். பார்! உன் இன்னும் பிறவா நற்குணங்களெனும் முட்டைகள், பிரகாசிக்கும் உணர்வுகளினாலான பொடிமீன்- கூட்டங்கள், பொன்மய செயல்கள் - இவையனைத்துடன் இறுதியாக உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வருவேன்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
201 Teach me to fish for all goodness in the net of searchlights.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org