W41. என்னை விழிப்புறச் செய், நடுக்கும் மோக நிகழ்வுகளைக் கனவென அறிய! (Whispers from Eternity - Tamil & English)
41. என்னை விழிப்புறச் செய், நடுக்கும் மோக நிகழ்வுகளைக் கனவென அறிய!
பின்னர், என் புன்னகை தளர்ந்து, இன்பத்தின் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது. திடீரென நான் கிழிந்த துணிகளுடன் பிச்சைக்காரனாய், வறுமையின் கடூரமான கல்லில் உட்கார்ந்திருப்பதாய்க் கண்டேன். நான் அழுதேன், கேளா, இரக்கமில்லா என் சூழ்நிலைக் கற்களின் மேல் என் கண்ணீர் சிந்தியது.
உலகம் பறைசாற்றா பரிகாசத்துடன் என்னைக் கடந்து சென்றது. நான் உன் உதவிக்காக கதறினேன். நான் தொடர்ந்து சிந்திய கண்ணீரின் ஏக்கத்தினால் என்னை வேறு வழியின்றி எழுப்பி விழிப்புறச் செய்தாய். அப்போது, நான் செல்வந்தனுமல்ல, ஏழையுமல்ல என்பதைக் கண்டு நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
மகிழும் செல்வச்செழிப்பும், வாட்டும் வறுமையும் என மாறிமாறி வரும் இந்தக் கனவிலிருந்து என்னை நீ அவசியமாக விழிப்படையச் செய்.
நிழல்-உலகங்களைப் படைப்பவனே, மரணமெனும் இந்த அருவருப்பான, கெட்ட சிம்ம சொப்பனங்களிலிருந்து என்னை விடுவி!
மரணமில்லாப் பெருவாழ்வினை என்னில் விழிப்படையச் செய்: சலனமற்ற அமைதியை என்னுள்ளத்துள் எழுப்பு. அதன்மூலம், குழப்ப வைக்கும் இந்த அதிபயங்கரமான உலக நிகழ்வுகள் எல்லாம் வெறும் கனவுகளே என அறிவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
41 Wake me, that I may know the terrors of mundane delusion to be but Dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org