W144. தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய். (Whispers from Eternity - Tamil & English)
144. தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.
இறைத்தந்தையே, தென்றல் என்னைத் தொடும்போதும், சூரியவொளி என் உடம்பை மேவும்போதும் அவற்றில் உன்னை நான் உணருமாறு செய். மலர்களின் சுகந்தத்தில் விரவி என்னுள்ளே வந்து புகு. என் அத்தியந்த எண்ணங்களின்மூலம் உன்னை நான் எப்போதும் உணருமாறு செய். உன்னை நான் மறந்தாலும், என்னை நீ மறந்துவிடாதே. உன்னை நான் நினைவு கூரவில்லையெனினும், என்னை நீ நினைவில் கொள். எப்போதும், என்றும், எக்கணமும் என்னுடனேயே நீ இரு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
144 Make me feel Thee through the touch of the breeze.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org