W53. என் கனவுகளின் கடலின் நடுவே உடைபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று. (Whispers from Eternity - Tamil & English)
53. என் கனவுகளின் கடலின் நடுவே உடைபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.
என் கனவுகளின் கடலின் நடுவே நான் பயணிக்கும் படகு உடைபட்டது. என் இன்பசுகத் தாங்கி உடைந்து நொறுங்கி விட்டது. அச்சமுறுத்தும், சோகமான இருண்ட கனவுகளின் கடல்நீரினூடே நான் மிக்க சிரமத்துடன் தத்தளித்து நீந்தினேன். உன் கருணைக் காற்றினால், ஒரு நம்பிக்கை நல்கும் சிறுதுடுப்பு என்னருகே மிதந்து வந்தது! அதை உடனே பற்றி இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டேன்!
கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மிதந்து கடைசியில் சுகமான அமைதியெனும் பொன்மயத் தீவினை அடைந்தேன். உன் அனுக்கிரகக் கடல்தேவதைகள் அங்கு குழுமி, என்னை நிரந்தர பாதுகாப்புள்ள உன் சாந்நித்தியத்திற்கு அழைத்துச் செல்ல வந்துசேர்ந்துள்ளனர்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
53 Save me from shipwreck on the Ocean of my Dreams
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org