W175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.(Whispers from Eternity - Tamil & English)
175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.
தெய்வத்தாயே, உனக்கு நாச நாட்டியம் (நாஸ்யம்) ஆடுவதில் பிரியம்.
பலவீனமான அழியும் (உடற்) சுடர்களை உன் நாசமேற்படுத்தும் போர்-நடனத்தில் சிதைவிக்கின்றாய், அதன்மூலம், எங்கள் ஆன்மாக்கள் சிதையாமல் பத்திரமாக இருப்பதை நீ புன்னகையுடன் காட்டுவதற்காக.
உன் கருணையினால், நீ எங்களைச் சுற்றி மூடியிருக்கும் கடினமான மாயமோகங்களின் களிம்புப் படலத்தைத் தேய்த்து அகற்றுகின்றாய்.
தெய்வத்தாயே, நீ அழிவு நடனத்தை விரும்புவதினால், நான் என் ஆசைகள், குறைகள், பலவீனங்கள், குறுகிய குணங்கள் ஆகிய அனைத்திற்கும் அவை என்றும் திரும்பாவண்ணம் ஒரேயடியாய்க் கொள்ளிவைத்துவிட்டு, தீயனவற்றை ஒழிக்கும் உன் நாட்டியத்தில் இணைந்து ஆடுகின்றேன்.
தெய்வத்தாயே, இப்போது என் குறுகிய தன்மை விட்டொழிந்ததால், நீ அழிக்க வேண்டுவது என்னுள் எதுவும் மீதமில்லை, ஆகையால் உன் அழிவு நடனத்திற்குப் பதிலாக என்னுள் உன் வரம்பற்ற அன்பு நடனத்தை ஆடு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
175 Dance in me Thy dance of Infinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org