Holy Kural - 120
120. தனிப்படர் மிகுதி - Pining alone
1. தாம்விழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. Stoneless fruit of love they have Who are beloved by those they love. V# 1191 2. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. The lover - and -beloved's self-givings Are like rains to living beings. V# 1192 3. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. The pride of living is for those Whose love is returned by love so close. V# 1193 4. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். Whose love is void of love in turn Are luckless with all esteems they earn. V# 1194 5. நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. What can our lover do us now If he does not requite our love? V# 1195 6. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. One sided pains; love in both souls Poises well like shoulder poles. V# 1196 7. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். This cupid aims at me alone; Knows he not my pallor and pain? V# 1197 8. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். None is so firm as she who loves Without kind words from whom she dotes. V# 1198 9. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. The lover accords not my desires And yet his words sweeten my ears. V# 1199 10. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. You tell your grief to listless he Bless my heart! rather fill up sea! V# 1200
Send Your Comments to phdsiva@mccrf.org