Holy Kural - 053
53. சுற்றந்தழால் - Cherishing kinsmen
1. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show. V# 521 2. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும். The gift of loving Kins bestows Fadeless fortune's fresh flowers. V# 522 3. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. A kinless wealth is like a tank Which overflows without a bank. V# 523 4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். The fruit of growing wealth is gained When kith and kin are happy found. V# 524 5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். Loving words and liberal hand Encircle kith and kin around. V# 525 6. பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். Large giver and wrathless man Commands on earth countless kinsmen. V# 526 7. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. The crows hide not; thy call and eat Welfare abides a man of heart. V# 527 8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். From public gaze when kings perceive Each one's merits so many thrive. V# 528 9. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். Forsaken friends will come and stay When cause for discord goes away. V# 529 10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். Who leaves and returns with motive The king should test him and receive. V# 530
Send Your Comments to phdsiva@mccrf.org