W112. எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
112. எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, வானத்தின் துளைகள் வழியேயும், நட்சத்திரங்களின் மினுமினுப்பின் வழியேயும் என்னைப்பார். சூரிய சந்திரர்களின் மூலம் என்னைக் கண்காணி. என் அன்பின் வழியே என்னை நீ நேசி. தென்றல் காற்றினால் என்னைத் தொட்டுப் பராமரி. என் இதயத்தின் வழியே என்னுளே நீ துடித்து செயல்படு. இந்த என் அழியும் தேகத்தின் வழியே உன் அழியாத் தன்மையினால் சுவாசி. என் குரலின் வழியே பேசு. என் கைகளின் மூலம் மற்றவர்களுக்கு உதவு. என் மனத்தினை உபயோகித்து மற்றவர்களுக்குப் புத்துணர்வூட்டு. என் மூச்சுக்காற்றின் வழியே நீ சுவாசி, ஏனெனில் இந்த பலவீனமான வயலின் வழியே நீ மட்டுமே உன் முழுமையான, நிரந்தர சங்கீதத்தைப் பாடமுடியும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
112 Demand for union with the Almighty.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org