W35. நான் தான்தோன்றித்தனமான அபஸ்வர கீதங்களை உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன். (Whispers from Eternity - Tamil & English)
35. நான் தான்தோன்றித்தனமான அபஸ்வர கீதங்களை உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்.
எவருடைய குரலினாலும் இசைக்கப்பெறாத பாட்டை நான் உனக்குப் பாடுவேன். என் கன்னி இசைக்கானங்களை நான் உனக்காக அர்ப்பணம் செய்வேன்.
யாரும் கேட்காத என் இதயகானத்தை நான் உனக்காகப் பாடுவேன். என் சங்கீதமழலையை போஷித்து வளர்த்து, மேலும் பயிற்சிபெறுவதற்காக அதனை உன்னிடம் அழைத்து வந்துள்ளேன்.
தான்தோன்றித்தனமான, அதிநுணுக்கமான கட்டுப்பாட்டுடன் கூடிய பாட்டினை நான் உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, என் இதயத்தின் தெம்மாங்குப் பாட்டுக்களை உனக்கு அர்ப்பிப்பேன். பழகித்தேய்ந்து, உணர்வெழுச்சியில் பிறந்த இசை மற்றும் மனக்கற்பனையில் உருவான பாட்டுப்பூக்களை நான் உனக்கு அர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, உயர்ந்த மலைப்பாதை போன்ற என் உள்ளத்தில் மலரும் வனமலர்களைக் கொண்டு உன்னை அர்ச்சிப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
35 I will not offer unto Thee mind-made hothouse Songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org