W63. எங்கள் எண்ணங்களையும், லட்சியங்களையும் புனிதமாக்கு. (Whispers from Eternity - Tamil & English)
63. எங்கள் எண்ணங்களையும், லட்சியங்களையும் புனிதமாக்கு.
வரம்பற்ற ஆற்றலுடைய ரஸவாதி, எங்கள் பலஹீனத்தை பலமாகவும், தவறான எண்ணங்களை, நல்லெண்ணங்களாகவும் புனிதமாக்கு.
ஒவ்வொரு காரியத்தின் விதைகளிலும் உன் புரிதலெனும் பூவை மலரச்செய்.
உன் தீர்க்கதரிசனமெனும் தந்திர மாயக்கோலினால், எங்கள் அருவருப்பான சுயநலப்பேய் குறிக்கோள்களை அனைவற்றிற்கும் சேவைபுரியும், மேன்மையான லட்சிய தேவதைகளாக உருமாற்று.
ஒவ்வொரு ஆசைக்குதிரைகளையும் உன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடுமாறு பழக்கு.
எங்கள் இருண்ட மருளை பொன்னார்ந்த ஞானமாக மாற்று.
எங்கள் குறைபாடுகளெனும் ஜட மூலதாதுக்களை, புனிதமான சொக்கத்தங்கத்தால் ஆன திரவநதியாக உருமாற்றி, அதனை உன் கரையை நோக்கித் தொடர்ந்து பாயுமாறு செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
63 Spiritualize our Thoughts and Ambitions.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org