W80. சுயமாக உருவாக்கிய தீய பழக்கங்களிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
80. சுயமாக உருவாக்கிய தீய பழக்கங்களிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, ஆன்மாவின் நிரந்தர சுகத்திற்கும், தொடுவுணர்வு, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய புலன்களின் அநித்திய இன்பத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பகுத்து அறிய எனக்குக்கற்பி. என் இச்சா சக்தியை வலிமைப்படுத்து; தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க எனக்குக்கற்பி; நல்லோர் நட்பினாலும் தியானத்தினாலும் அமைந்த நற்பழக்கங்களின் வழிநடக்க எனக்குக்கற்பி; அனைத்திற்கும் உச்சமாக, ஞானத்தின் வழிகாட்டுதலின்படி நடக்க எனக்குக்கற்பி; விவேகத்துடன் கூடிய சரியான நிர்ணயத்தினால், என்னைத் தீவினைகளிலிருந்து விலகியிருக்க எனக்குக்கற்பி; இறுகிப்போன கெட்ட பழக்கங்களினால் பலவந்தப்படுத்தப்படாமல், என் சுதந்திரமான இச்சாசக்தியினால் வழிகாட்டப்பட்டு நல்லவற்றை விரும்பி மேற்கொள்ளுமாறு எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
80 Demand to be freed from self-created evil habits and temptations.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org