MCCRF - A global volunteer network

W147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

என் சுய இச்சாசக்தியை நான் உபயோகிக்க விரும்புகின்றேன், ஆனால், இறைத்தந்தையே, நீ அதை வழிநடத்து. அதை நீ பூரண திருப்தியெனும் பொன்மய சொர்க்கத்திற்குப் பிரயோஜனப்படுமாறு வழிகாட்டு. நீ என்னைப் பலனற்ற ஆசைகளாலும், தளரும் நம்பிக்கையாலுமான சிறைக்கதவுகளுக்குப் பின்னால், என்னைக் குறுக்கி அடைக்காமல் இருப்பதை அறிவதனால், நான் எல்லையற்ற அனந்தத்தின் ஆனந்தக்குழந்தையாகவே இருப்பேன்.

பழிக்கத்தகு சோம்பல் சங்கிலிகளை நான் உடைத்தெறிவேனாக. அதனால், நான் குறுக்கங்களும், மாயமோகங்களுமாலான காட்டினை, பயமற்ற சுதந்திரத்துடன் வீறுநடை போட்டுத் தீ போலக் கடந்து செல்வேன்.

என் புல்லிய அஹங்காரம், "என் பெருமையைக் காண்! என்னை வழிபடு!" என மதம்கொண்டு பீற்றுகிறது. ஆனால், நான் அதன் மாயத்தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, கற்பனைக்கெட்டாத அழகுடைய மற்றொரு ரூபத்தைக் காண்பேனாக. உன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்தத் தூசிநிகர், மார்தட்டும் மாயவித்தைக்காரனின் வார்த்தையைக் கேட்பதைத் தவிர்த்து, அமைதியுடன் இயைந்த என் ஆன்மக் காதுகளால், உன் ஒப்பரியாத குரலினால், "நானே அவன்!" என்று காலங்காலமாக சன்னமாக ஒலிக்கும் பிராணவாயுச் சிறகுகளுடன் கூடிய மணங்கமழும் சங்கீதத்தை, நான் மனம் லயிக்கக் கேட்பேனாக.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
147 Demand not to be enslaved by the ego or by passivity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.