W212. வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது. (Whispers from Eternity - Tamil & English)
212. வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது.
நான் என் மனத்தின் எண்ணக் கதிரோட்டத்தை, புலன்களின் சிற்றின்ப எல்லைப்பரப்புகளிலிருந்து, வரம்பற்ற தளத்திற்குச் செல்லுமாறு மாற்றி முடுக்கிவிட்டேன். என் கவனத்தின் பிரகாசம் எல்லா திசைகளிலும் பரவி, அது வரம்பற்ற எல்லையைத் தழுவிநின்றது.
நான் வரம்பற்ற எல்லையினுள் ஆழ்ந்திருக்கையில், என் எண்ணம் ஊனுடம்பின் புறத்தோற்றங்களெனும் திரைகளுக்குப் பின்னால் அகப்படவில்லை; மாறாக, நான் வெட்டவெளி தளத்தில் நின்றுகொண்டு பாய்ந்து வரும், ஒளிரும் எண்ண ஓட்டங்களைக் கண்டேன்; மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலங்களாக உலகில் தோன்றிய மற்றும் இன்னும் தோன்றாத நாகரீகங்களைப் பற்றிய எண்ண அலைகளையும் உணர்ந்தேன்.
வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
212 All futurity danced in me the Infinite Rhythm
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org