Holy Kural - 031
31. வெகுளாமை - Restraining anger
1. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் Anger against the weak is wrong It is futile against the strong. V# 301 2. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற Vain is wrath against men of force Against the meek it is still worse. V# 302 3. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் Off with wrath with any one. It is the source of sin and pain. V# 303 4. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer? V# 304 5. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay. V# 305 6. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge. V# 306 7. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground. V# 307 8. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. Save thy soul from burning ire Though tortured like the touch of fire. V# 308 9. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். Wishes he gains as he wishes If man refrains from rage vicious! V# 309 10. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled. V# 310
Send Your Comments to phdsiva@mccrf.org