Holy Kural - 057
57. வெருவந்த செய்யாமை - Avoiding terrorism
1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. A king enquires and gives sentence Just to prevent future offence. V# 561 2. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway. V# 562 3. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed. V# 563 4. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். As men the king a tyrant call His days dwindled, hasten his fall. V# 564 5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul. V# 565 6. கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade. V# 566 7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். Reproofs rough and punishments rude Like files conquering power corrode. V# 567 8. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு The king who would not take counsels Rages with wrath-his fortune fails. V# 568 9. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். The king who builds not fort betimes Fears his foes in wars and dies. V# 569 10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth. V# 570
Send Your Comments to phdsiva@mccrf.org